சட்டமன்ற தேர்தலில் கூட வெற்றிபெற முடியாத அண்ணாமலைக்கும், முருகனுக்கும் பதவி.. பாஜகவை பங்கம் செய்த அழகிரி.

By Ezhilarasan BabuFirst Published Jul 16, 2021, 10:28 AM IST
Highlights

மதுரையை மையமாக வைத்து ஒரு நாடு, வேலூர் மையமாக வைத்து ஒரு நாடு சிதம்பரத்தை மையமாக ஒரு நாடு நான் கேட்பேன். இப்படி கேட்டு கொண்டே போனால் எப்படி இது முடியும் என கூறினர்.

இந்த நாட்டிற்காக சுதந்திரம் வாங்கி கொடுத்தது இந்த இயக்கம், செக்கு இழுத்தது இந்த இயக்கம், மொழியை காப்பாற்ற சிறை சென்றது இந்த இயக்கம் அதுதான் காங்கிரஸ் பேரியக்கம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் பேசிய அவர், ஒரே மாதிரி சிந்தனை கொண்ட ஏராளமான தோழர்கள் இணைந்து உருவாக்கியது இந்த நாடு. உருவாக்கியவர்கள் கையில் இந்தநாடு தற்போது இல்லை. 

அதிகாரம் நல்லவர்கள் கையில் சென்று இருந்தால் நல்லது. ஆனால் அதிகாரம் தவறானவர்கள் கையில் சென்றுள்ளது.  என்ன உணவு உண்ண வேண்டும் என அவர்கள் சொல்கிறார்கள். மாட்டு கறி உண்ட காரணத்திற்காக அடித்து கொல்லப்பட்டார்கள். இந்த சட்டமும், நாட்டின் பிரதமரும் இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. சூத்திரர்கள் தெருவில் நடக்க அனுமதியில்லை. பஞ்மர்கள் இரவில் மட்டும் தான் நடக்க வேண்டும் இது தான் மனுநீதி. இதனை தகர்த்தது காங்கிரஸ் கட்சி. மகாத்மா காந்தியிடம் ஜின்னா பாகிஸ்தான் உருவாக்கி தர கேட்டார்கள். அது இஸ்லாமிய நாடு என்றார். நாளை ஒரு புதிய நாடு உருவாகும். நான் இந்து ஆனால் இந்த நாட்டை இந்து நாடு என அறிவிக்க மாட்டேன். இந்தியா என அறிவிப்பேன் என தெரிவித்தார்.

இதேபோல் சிந்தனை கொண்டவர் ராகுல்காந்தி. மொழி, மதம் இல்லாத தலைவர்.புதிதாக கொங்கு நாடு என பாஜக சொல்கிறார்கள். இது போன்ற விதையை போட்டு அரசியல் செய்யலாம் என பாஜக நினைக்கிறது. மதுரையை மையமாக வைத்து ஒரு நாடு, வேலூர் மையமாக வைத்து ஒரு நாடு சிதம்பரத்தை மையமாக ஒரு நாடு நான் கேட்பேன். இப்படி கேட்டு கொண்டே போனால் எப்படி இது முடியும் என கூறினர். இதனால் தான் பாஜக மதவாத கட்சியாக உள்ளது. மக்களுக்காக பாஜக தலைவர்கள் சிறைக்கு சென்று இருப்பார்களா என கேள்வி எழப்பிய அவர், சட்டமன்ற தேர்தலில் பாஜக கட்சியின் தலைவர் தோற்றார். அவர் மத்திய அமைச்சர், அண்ணாமலை தோற்றார் அவர் தற்போது மாநில தலைவர். இது தான் பாஜக.
 

click me!