அடுத்தடுத்து 21 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று..? மூன்றாவது அலை தொடங்கிவிட்டது.? பீதியில் புதுச்சேரி.

By Ezhilarasan BabuFirst Published Jul 16, 2021, 10:49 AM IST
Highlights


கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டு அது மெல்ல மெல்ல கட்டுக்குள் வராத தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

புதுச்சேரியில் வழக்கத்திற்கு மாறாக இதுவரை 21 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதில் 1 வயது முதல் 5 வயது உள்ள 16 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டு அது மெல்ல மெல்ல கட்டுக்குள் வராத தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. குறிப்பாக புதுச்சேரியில் குழந்தைகள் அதிக அளவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 16 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது புதுவையில் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று அதிக அளவில் ஏற்பட்டிருப்பது, மூன்றாவது அலை துவங்கிவிட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

வழக்கத்துக்கு மாறாக குழந்தைகளுக்கான நோய்த்தொற்று அதிகமாகி வருவதால், மாநில மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ள 6 வயதுக்கு உட்பட்ட 16 குழந்தைகள் அனைவரும் கதிர்காமம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சுகாதார துறை இயக்குனர் மோகன் குமார், புதுச்சேரியில் இதுவரை 21 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருக்கின்றது. அதில் 1 வயது முதல் 5 வயது உள்ள 16 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மீதம் உள்ள 5 பிறந்த குழந்தைகளின் தாய்களுக்கு கொரோனா தொற்று உள்ளதால், இந்த குழந்தைகளுகான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கொரோனா இருப்பதை கண்டு மக்கள் அச்சமடைய வேண்டாம். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நோய் தொற்று வராது. குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் என்பதை ஆஷா ஒர்க்கர், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், புதுச்சேரியில் 5 பேர் டெங்கு பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 
 

click me!