திண்டுக்கல் சீனிவாசனுக்கு நெஞ்சு வலி? அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி..!

By vinoth kumar  |  First Published Nov 19, 2022, 12:15 PM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளருமான அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், கழக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- தலையில்லாத முண்டமாக அதிமுக..! இபிஎஸ் உடன் அமமுக கூட்டணி என எங்கும் சொன்னதில்லை- டிடிவி தினகரன் ஆவேசம்

undefined

தற்போது, அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே அவர் அமைச்சராக இருந்த போது அவருக்கு அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;- விரைவில் அதிமுக பொதுக்குழு.. வாய்ப்பு கிடைத்தால் டிடிவி.யை சந்திப்பேன்.. இபிஎஸ்ஐ அலறவிடும் ஓபிஎஸ்.!

click me!