"எதிர்த்து நிற்கும் எடப்பாடி டீமை சரண்டர் அடைய வைக்க வேண்டும்'' திஹார் நாயகனின் மாஸ்டர் மூவ்!

Asianet News Tamil  
Published : Jun 14, 2017, 05:10 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
"எதிர்த்து நிற்கும் எடப்பாடி டீமை சரண்டர் அடைய வைக்க வேண்டும்'' திஹார் நாயகனின் மாஸ்டர் மூவ்!

சுருக்கம்

Dinakaran Master Plan opposing must be made to the Surrender

கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று சிறைவாசத்திற்கு முன்பு சொன்னவர் தற்போது அதிமுகவில் இருந்து தன்னை நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்குத் தான் உண்டு என்று அதிரச் செய்திருக்கிறார் டிடிவி. தினகரன்.

இரட்டை இலை லஞ்ச வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கும் டிடிவி.தினகரனின் முன்பு கொட்டிக்கிடக்கிறது பல சவால்கள்..

அதை அத்தனையும் அறிந்தவராய் முதலில் இருந்து ஆடு புலி ஆட்டத்தை வெகு ஜோராக ஆரம்பித்திருக்கிறார் டிடிவி.

துணைப் பொதுச் செயலாளர் என்ற மகுடம்

அந்நிய செலாவணி வழக்கால் தமிழகத்திற்கே அந்நியமாக இருந்த டிடிவி தினகரனை, பக்கத்து வீட்டு டெண்டென்ரைப் போல பரீட்சியமாக்கியது அதிமுகவின் துணைப் பொதுப் பொதுச் செயலாளர் பதவி.ஜெயலலிதா மறைவாலும், சசிகலாவின் சிறைவாசத்தாலும் கிடைத்த இப்பதவியை முடிந்த வரை தக்க வைத்துக் கொள்வதே டிடிவி முன்பு தற்போது இருக்கும் சவால்.

இரட்டை இலையும், அதிமுகவும் தங்களுக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையத்திற்கு நடையாய் நடந்து கொண்டிருக்கிறது ஓ.பி.எஸ். அணி. இது தொடர்பான ஆயிரக்கணக்கான பக்கங்கள் அடங்கிய ஆவணங்களை பன்னீர் தரப்பு அளித்து வருகிறது… தேர்தல் ஆணையத்தில் பன்னீர் அணி ஆவணங்கள் சமர்பிப்பு என்று செய்தி வரும் அடுத்த நாளே, அதிமுக மாவட்டச் செயலாளர்கள்,கழக நிர்வாகிகள் என பலரிடம் பெறப்பட்ட பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்து சூடு ஏற்றுகிறது டிடிவி தரப்பு.. 

தற்போதைய நிலவரப்படி நிர்வாகிகள் கையெழுத்திட்ட பிரமாணப் பத்திரங்களே வெயிட் என்பதால், அதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகிறார் டிடிவி. இருக்கிற பத்திரத்தை டெல்லிக்கு உடனே அனுப்பிடுங்க. கையெழுத்து வாங்காதவங்களிடம் கறாரா வாங்கிக்குங்க என்று கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு கண்டிஷன் போட்டு வருகிறார். அதிமுக துணைப் பொதுச் செயலாளர் என்ற அந்த மாமகுடத்தை தவறவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாகவே தினகரன் உள்ளார்.

அதிகரிக்கும் தொண்டர் படலம்

டிடிவி. தினகரனின் வரலாறை இனி யார் எழுதினாலும் திகார் சிறைவாசத்திற்கு முன்பு, திகார் சிறைவாசத்திற்கு பின்பு என்பதை மறந்தும் தவிர்க்க இயலாது. முன்பு உயர்மட்ட அளவில் மட்டுமே அறியப்பட்டு வந்த டிடிவி., சிறைவாசத்திற்குப் பிறகு சாதாரண கட்சித் தொண்டனின் சட்டைப் பையில் புகைப்படமாக அலங்கரிக்கும் அளவுக்கு உருவெடுத்திருக்கிறார்.

இரட்டை இலை லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட போது பெயரளவுக்கு டெல்டா மாவட்டங்களில் மட்டும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆனால்  விடுதலைக்குப் பிறகு ஒட்டுமொத்த தமிழக அளவிலும் அவருக்கு என கனசிமான ஆதரவாளர்கள் பெருகி உள்ளனர். ஜாமீனில் விடுதலையான தினகரனை டெல்லி திகார் சிறைச்சாலைக்குச் சென்று ஆயிரத்திற்கும் அதிகமானோர் வரவேற்றதே இதற்குச் சான்று..

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது “தொப்பி” தினகரனுக்காக கூடிய கூட்டத்தை விட “திகாருக்குப்” பிறகு தினகரனை விசுவாசமாக பின் தொடரும் கூட்டம் அதிகம் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.. சிறைவாசத்தினால் பலரது குட்புக்கில் இடம்பிடித்துள்ளார் டிடிவி.

அதிமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி, தொண்டர் பலம் என இரண்டு ஏரியாக்களிலும் அசுர பலத்தோடு தினகரன் இருந்தாலும், எடப்பாடியை ஓரங்கட்டுவதில் தான் இருக்கிறது பிரச்சனை. முன்பு மிஸ்டர் விசுவாசமாக இருந்த எடப்பாடியார் தற்போது டிடிவிக்கு எதிராக எட்டுத் திக்கும் முழங்கிக் கொண்டுள்ளார். இதனை வெளிப்படையாக பன்னாமல் இலைமறைக் காயாக செய்வதே எடப்பாடியின் பலம்.

ஜாதி ரீதியாகப் பார்த்தாலும் எடப்பாடியாருக்கு கொங்கு மண்டல எம்.எல்.ஏ.க்கள் பூரண ஆதரவு அளித்து வருகின்றனர்.. “எத்தனை நாளுக்கு தாங்க,  அவங்களுக்கு நாமோ ஆதரவு கொடுத்திட்டு இருக்க முடியுங். நமக்கிட்டயும் பலம் இருக்குங்க. இருக்கிறது  நாலு வருஷமுங். அதுவரைக்கம் கொங்கு அரசாகவே தமிழகம் இருந்துட்டுப் போகட்டுமுங்.  என்று கொங்கு தமிழ்  மனக்க எடப்பாடியாருக்கு எடுப்பாக சிலர் பக்கவாத்தியம் வாசிக்க, கொஞ்சமல்ல அதிகமாகவே உற்சாகமடைந்திருக்கிறார்.

அதன் வெளிப்பாடே ஈரோட்டில் எடப்பாடியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர். அதிமுக சார்பில் நடைபெறும் விழாவில் ஜெயலலிதாவின் உருவப் படம் மிகப் பெரியதாகவும், அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளின் படங்கள் சிறிய அளவில் இருக்கும் என்பதே வழக்கம். ஆனால் ஈரோட்டில் அந்த நடைமுறையை அடித்து துவம்சம் செய்திருக்கின்றனர் ரத்த உடன்பிறப்புகள்… 

பெயருக்காவது ஓரிடத்தில் அம்மா படத்தை ஓரமாவது எங்கயாவது போட்டிருக்கலாம். அதுக்காக இப்படியா பன்றதுனு  என்று சீனியர்கள் முகம் சுழிக்கம் படி படம் முழுவதும் எடப்பாடியே கைகூப்பி வணக்கம் தெரிவிக்கிறார்.

ஜெயலலிதாவின் புகைப்படம் மருந்துக்குக் கூட இல்லை…இப்படி வெகுஜோராக நடந்து வருகிறது கொங்கு சாம்ராஜ்ஜியம். ஆரம்பத்திலே சொன்னோம். கேட்டீங்களா என்று டிடிவிக்கு இப்போது டியூசன் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் அவரது தீவிர நலன்விரும்பிகள்.

காட்டில் சிங்கமாக வாழ விரும்பினால், சிறு நரிகளையெல்லாம் கண்டு அஞ்சாமல் துணிவோடு செயல்பட வேண்டும் மிஸ்டர் டிடிவி.

PREV
click me!

Recommended Stories

மு.க.ஸ்டாலினிடம் உருதுபேசச் சொல்லி கேட்பீர்களா..? காஷ்மீர் Ex முதல்வர் மெஹபூபா முப்தி ஆத்திரம்..!
பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!