
“அணிகள் இணைவதில் உடன்பாடு தான்” – தினகரன் அதிரடி..!
அதிமுகவின் எல்லா அணிகளும் இணைய வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்
தம்பி துரையின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்த டிடிவி தினகரன், அதற்கு பதிலளிக்கும் விதமாக “அணிகள் இணைவதில் உடன்பாடு தான் “ என தன்னுடைய விருப்பதை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது.ஒன்றி ஓபிஸ் அணி மற்றொன்று சசிகலா அணி
அதாவது ஒரே கட்சி இரண்டு குழுக்களாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், ஒபிஸ் அணி எடப்பாடியுடன் இணைந்து, டிடிவி தினகரனை கழட்டி விட்டது. அதாவது சசிகலா குடும்பத்தையே ஒதுக்கி வைத்தது. பின்னர் சசிகலாவும் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார்.
இந்நிலையில் செய்வதறியாது திணறிய டிடிவி தினகரன்,தற்போது இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக எடப்பாடிக்கு எதிராக கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்த டிடிவி தினகரன்,அணிகள் இணைவதில் ஆர்வம் காட்டி உள்ளார் .
என்னவென்றால், தம்பிதுரையின் அணிகள் இணைய வேண்டும் என்ற கருத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், டிடிவி தினகரனின் இந்த கருத்து எப்படி சாத்தியம் என யோசிக்கும் போது, கடந்த வாரம் சசிகலா சிறையிலிருந்து, 5 நாள் பரோலில், உடல் நல சரியில்லாத அவருடைய கணவரை காண சென்னைக்கு வந்து இருந்தார்.அவரை வரவேற்பது முதல் வழி அனுப்பியது வரை டிடிவி தினகரன், அவருடைய சித்தியான சசிகலாவுக்கு அவ்வளவு ஆதராவாக இருந்தார்.
அந்த சமயத்தில் சசிகலா தினகரனுக்கு கொடுத்த டிப்ஸ் தான் இதுவா ? என அரசியல் வட்டாராம் பேசி வருகிறது.
இதனை தொடர்ந்து அதிமுக அணிகள் இணையுமா? அல்லது இணைந்த அணிகள் பிரியுமா ? அதாங்க ஓபிஸ் அணியும், அவருடைய ஆதரவாளர்களும் கொஞ்சம் அப்செட்ல தான் உள்ளார்களாம் .....
காரணம்:
ஓபிஸ் துணை முதல்வராக இருந்தாலும், அவருக்கு கொடுக்க வேண்டிய எந்த முக்கியத்துவமும் சரியாக இல்லையாம் ...
எடப்பாடி அவர் இஷ்டத்துக்கு செய்கிறாராம்.....இவரை அவ்வளவாக கண்டுக்கொள்வதே இல்லையாம் .....
இதற்கு நடுவுல தான், 29 பக்க அறிக்கையை ஓபீஸ் டெல்லியில் சப்மிட் செய்து இருக்கிறார்.
அப்படியென்றால், ஓபீஸ் நிலை என்ன? கட்சியில் முக்கியத்துவம் இல்லையா? ஒருவேளை டிடிவி தினகரன் அணி இணைந்தால்,ஓபிஸ் தர்மயுத்தம் மீண்டும் தொடங்குமா ?
டெல்லி மேலிடம் அடுத்து என்ன சொல்ல போகிறது ....?
தமிழக புதிய ஆளுநர் மெர்சல் காட்டுவாரா ? என்ற ஒட்டு மொத்த கேள்வியும் எழுந்துள்ளது.