கடுப்பு... துரத்தியடிப்பு... புரூடா... புலம்பல்... தூது... சமாதானம்... சந்திப்பு!

First Published Jan 12, 2018, 10:42 AM IST
Highlights
dinakaran will be meet sasikala at parappana agrahara


ஆர்.கே.நகர் வெற்றிக்குப்பின் சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற பரப்பன ஆக்ராஹாரவுக்கு சென்றார். அப்போது ஜெயலலிதா மருத்துவமனை வீடியோ விவகாரத்தால் கோபத்தில் இருந்த சசிகலா தினகரனுடன் எதையும் பேசாமல் திருப்பி அனுப்பிவிட்டதாக தகவல் கிடைத்தது.ஆனால் வெளியில் வந்த தினகரனோ சின்னம்மா மௌன விரதத்தில் இருக்கிறார். சைகையில் பேசினார் என புருடா விட்டார்.

இதனையடுத்து கடந்த சிலதினங்களுக்கு முன்பு பரப்பன ஆக்ராஹாரவுக்கு பறந்து சென்ற விவேக் தினகரனைப் பற்றி சராமாரியாக போட்டுகொடுத்துள்ளார். ஜெயலலிதா வீடியோ விவகாரம், சசிகலா புஷ்பா சந்திப்பு, ஸ்லீப்பர் செல்ஸ் விவகாரம் என ஒட்டு மொத்தமாக புலம்பித் தள்ளியிருக்கிறார்  

இதனையடுத்து நேற்று ஒரு செய்தி தினகரனுக்கு கிடைத்திருக்கிறது. அது என்னன்னா பொங்கலை முன்னிட்டு சின்னம்மா உங்களை சந்திக்கனும்னு சொன்னதாக புகழேந்தியிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறதாம். சரி இன்று சட்டமன்றக் கூட்டம் இருந்தும் எதற்காக இந்த பரப்பன அக்ரஹாரா பயணம்? அதற்க்கான அவசியம் என்ன? இதற்கு தினகரன் சொன்ன பதில், ‘பொங்கலுக்கு முன்பு சித்தியைப் பார்த்து வாழ்த்துச் சொல்லணும். நாளைக்கு விட்டுட்டா ஐந்து நாட்கள் லீவு வந்துடும். என அதனால் நாளைக்கே பார்த்தாகணும் இன்னொரு புருடா விடத்தான் போகிறார்.  

ஆனால் நடந்ததோ வேறு நேற்று இரவு, பெங்களுருவில் இருக்கும் புகழேந்திக்கு அழைப்பு வந்ததாம் அதாவது தினகரனை நான் உடனே பார்க்கணும் உடனே பெங்களுருக்கு வரச் சொல்லுங்க... என்பது தான் அந்த தகவல், இந்தவிஷயம் அறிந்த தினகரன் நான் போன தடவை போன போது அவங்கதான் பேசவே இல்லையே... இப்போ அவங்கதான் வரச் சொன்னாங்களா? என தெளிவாக கேட்டாராம் தினா. அவர்களும் சின்னம்மா தான் வரசொன்னதாக சொன்னார்களாம்.

சசிகலாவைப் பொறுத்தவரை விவேக்கிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கலாம் என திட்டமிட்டிருக்கிறாராம். ஏற்கெனவே ஜெயா டிவி நிர்வாகத்தை அவரிடம் ஒப்படைத்த பிறகு, அவருடைய நிர்வாகத் திறமை எப்படி என சசிகலாவிடம் சொல்லி இருக்கிறார்கள். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அரசியலுக்கு வரவேண்டும் என்பது தான்  விவேக்கின் விருப்பமும்கூட, அதனால், விவேக் அரசியல் நிலை பற்றி தினகரனுடன் பேச இருக்கிறாராம்.

அதுமட்டுமல்லாமல், ஜெயலலலிதா மருத்துவமனை சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் எல்லாமே பாதுகாப்பாக தினகரனிடம்தான் இருக்கிறதாம். டிடைதேர்தல் நேரத்தில் பண்ண மாதிரி இனி எந்தக் வீடியோவும் வெளியாக கூடாது. அந்த வீடியோக்களை எல்லாம் இளவரசி மகள் கிரிஷ்ணப்ரியாவிடம் ஒப்படைக்கச் சொல்லவும் போகிறாராம். என்னதான் தினகரன் மீது சசிகலா கோபமாக இருந்தாலும், இருவருக்கும் நெருக்கமாக இருப்பது பெங்களூரு புகழேந்திதான்.

கடந்த முறை சசியை சந்திக்க சென்றபோது விபத்தில் சிக்கிய புகழேந்தி வீட்டுக்குப் போய் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வந்துள்ளாராம் தினகரன். அப்போது, மனம் விட்டு பேசிய தினகரன் சித்தி என்மேல கோபத்துல இருக்காங்க, எங்க குடும்பத்துல இருக்கறவங்க தான் அவங்க கிட்ட இப்படி தப்பு தப்பா என்ன பத்தி சொல்லிருக்காங்க என புலம்பினாராம்.

அதெல்லாம் இருக்கட்டும் விடுங்க ‘சின்னம்மாகிட்ட நான் பேசுறேன். நீங்க போங்க..’ என சொல்லி அனுப்பி இருக்கிறார் புகழேந்தி. அவர் சொன்னபடியே கடந்த சில தினங்களுக்கு முன்பு பரப்பன ஆக்ராஹாரவுக்கு சென்ற புகழேந்தி சசியிடம் பேசியிருக்கிறார். தற்போது தமிழக அரசியலில் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார் தினகரன். மக்களுக்கும் நம் மீது கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கிறது.

எதைபத்தியும் கவலை படாதிங்க அவர நாங்க பாத்துக்றோம் நீங்க மட்டும் கோபத்த விட்டுட்டு அவர்கிட்ட பேசுங்க என சசியிடம் தினகரனை பற்றி சொல்லியுள்ளார். சசியும் கொஞ்சம் சமாதனம் ஆனதால், சரி எப்ப வந்த பாக்கனும்னு நான் சொல்கிறேன் என சொல்லி அனுப்பியிருக்கிறார். சொன்னதைப்போலவே, இன்றைய சந்திப்புக்கும் ஏற்பாடு செய்திருக்கிறாராம்”

click me!