அடுத்தது என்ன? - சசிகலாவை நாளை சந்திக்கிறார் டிடிவி தினகரன்?

 
Published : Jun 04, 2017, 11:43 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
அடுத்தது என்ன? - சசிகலாவை நாளை சந்திக்கிறார் டிடிவி தினகரன்?

சுருக்கம்

dinakaran wants to meet sasikala

சொத்துகுவிப்பு வழக்கில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை டிடிவி தினகரன் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா அணி ஒ.பி.எஸ் அணி என இரண்டாக உடைந்தது.

இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு சிறைதண்டனை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி தினகரனை துணைப்பொதுச்செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமியை முதன்மை வேட்பாளராகவும் நியமித்துவிட்டு சிறைக்கு சென்றார்.

தொடர்ந்து அதிக எம்.எல்.ஏக்களின் பெரும்பான்மை தமக்கு இருப்பதாக நிரூபித்து எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

இதனால் ஒ.பி.எஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு எடப்பாடி அரசுக்கு பல முட்டுக்கட்டைகளை போட்டது. ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்காக தினகரன் தரப்புக்கும் ஒ.பி.எஸ் தரப்புக்கும் போட்டி நிலவியது.

எனவே தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கிவிட்டு வேறு ஒரு சின்னத்தை கொடுத்துள்ளனர்.

இதையடுத்து இரட்டை இலையை குறுக்கு வழியில் பெற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கபட்டார்.

பின்னர் நேற்று ஜாமினில் வெளிவந்த தினகரன், கட்சி பணிகளை தொடருவேன் எனவும் சசிகலாவின் ஆலோசனை பெற்று அடுத்த கட்ட முடிவு எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், சொத்துகுவிப்பு வழக்கில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை டிடிவி தினகரன் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை... கடைசியில் மண்டியிட்ட வங்கதேசம்..!
ஹமாஸை ஒழிப்பதில் நாங்களே தலைமை தாங்குவோம்.. அமெரிக்காவிடம் அடம்பிடிக்கும் பாகிஸ்தான் இராணுவம்..!