தினகரன் எடுத்த அதிரடி முடிவு..! "இப்படி ஒரு சூழ்நிலை வந்தால் நான் அரசியலிலேயே இருக்க மாட்டேன்"..!

By thenmozhi gFirst Published Nov 10, 2018, 1:41 PM IST
Highlights

ஆயுட்காலம் வரை பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் அரசியலில் நான் இருக்க மாட்டேன் என்றும் டிடிவி தினகரன் அதிரடியாக கூறி உள்ளார்.

ஆயுட்காலம் வரை பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் அரசியலில் நான் இருக்க மாட்டேன் என்றும் டிடிவி தினகரன் அதிரடியாக கூறி உள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு அதிலிலிருந்து ஓபிஎஸ் தர்மயுத்தத்தை  தொடங்கினார்.அதன் பிறகு மத்தியில் ஆளும் பாஜக வழிநடத்தலின் படி, எடப்பாடி உடன் கைகோர்த்துக்கொண்டார். ஆனால் சசிகலா மற்றும் தினகரன் டீமை அப்படியே ஓரங்கட்டி விட்டார்கள். சசிகலா சிறைக்கு சென்றுவிட்டார். தினகரன் அமமுக கட்சி தொடங்கி திறம்பட நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் எந்த ஒரு முக்கிய முடிவை எடுப்பதாக இருந்தாலும், பெங்களூரு அக்ரஹாரா சிறையில்  உள்ள சசிகலாவை சந்தித்துவிட்டு தான் முடிவை அறிவிப்பார் தினகரன். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க,  ஆளும் அதிமுக அரசை எப்படியாவது வீழத்த வேண்டும் என்பதற்காக, எதிர்கட்சியான திமுக மற்றும்  தினகரன் தரப்பு தகுதி இழந்த 18 எம்.எல். ஏக்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.

சமீபத்தில் வெளியான, 18 எம்.எல்.ஏக்களின் குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு தினகரன் தரப்பிற்கு பின்னடைவாக  இருந்தாலும், தேர்தலை சந்திக்க தயார் என நம்பிக்கையுடன் இருகின்றனர். அதற்கேற்றவாறு இடைத்தேர்தலை நடத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தகுதி நீக்கம்  செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் கூட தேர்தலில் நிற்கலாம் என்ற போக்கு உள்ளத்தால், தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என  வீரமாக உள்ளனர் தினகரன் தரப்பு.

இந்த தருணத்தில் வரும் மே மாதம் வர உள்ள பார்லிமென்ட் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க உள்ளது என்ற கேள்விக்கு மட்டும், தினகரன் கூறும் ஒரே பதில்...ஆயுட்காலம் வரை பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் அரசியலில் நான் இருக்க மாட்டேன் என்றும் தெரிவித்து உள்ளார்.

சரி அப்படி என்றால், திமுக உடன் கூட்டணி வைத்துக்கொள்ள உள்ளீர்களா என்ற கேள்விக்கும்.. திமுக  உடன் கூட்டணிக்கு என்றுமே வாய்ப்பு இல்லை.... அவர்களே காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் போது , நான் எப்படி அவர்களுடன் கூட்டணி வைக்க நினைப்பேன் என்று தெரிவித்து உள்ளார்.

அதே வேளையில், ஒரு வேளை காங்கிரஸ் திமுக வை கழட்டி விட்டுட்டு தங்களை அணுகினால் அப்போது வேண்டும் என்றால் கூட்டணி பற்றி சிந்தித்து பார்க்கலாம் என தினகரன் தெரிவித்து உள்ளார்.

click me!