
மணி 12 ஆகி கடந்துவிட்டது! தேநீர் நேரம் முடிஞ்சிடுச்சி...கடித்துக் கொள்ள இரண்டு கரெண்ட் அரசியல் பிஸ்கட்ஸ்:
* மஹாபுஷ்கர விழாவை முன்னிட்டு நேற்று காவிரியாற்றில் நீராடினாரல்லவா முதல்வர் எடப்பாடி பழனிசாமி! இதை திருச்சியில் கிண்டலடித்த தினகரன் “சின்னம்மாவுக்கும், தொண்டர்களுக்கும் துரோகம் இழைத்த பழனிசாமி எந்த புனித நதியில் நீராடினாலும் பாவத்தை நீக்க முடியாது” என்று அட்டாக்கியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கிறேன் பேர்வழியென்று எடப்பாடியின் சகாவும், அமைச்சருமான ஜெயக்குமார் ‘இந்து மக்கள் புனிதமாக நினைக்கும் புஷ்கர விழா காவிரி நீரை தினகரன் இழிவாக பேசி அம்மக்களின் மனதை புன்படுத்துகிறாரா?’ என்று ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்.
இதை தினகரன் அணி ‘இப்படியெல்லாம் மொக்க ரியாக்ஷன் கொடுக்குறதுக்கு பதிலா கம்முன்னு இருக்கலாம்.’ என்று கலாய்த்திருக்கின்றனர்.
* எதற்கும் அஞ்சாத சிங்கமான செந்தில் பாலாஜி முன் ஜாமீன் வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தான் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி சில கோடிகள் மோசடி செய்துவிட்டதாக இவர் மீது எப்பவோ கொடுக்கப்பட்ட புகாரை இப்போது தேடி எடுத்து சென்னை மத்திய க்ரைம் பிராஞ்ச் போலீஸ் கடமையாற்ற துடித்து இவரை பின் தொடர்வதாலேயே இந்த முன் ஜாமீன் முயற்சி.