
ஆர்கே நகர் இடைதேர்தலில் பணப்பட்டுவாடா வழக்கில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்தார். ஆர் கே நகர் இடை தேர்தலில் பணபட்டுவாடா நடந்தது தொடர்பாக ராஜேஷ் லக்கானி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது
இதற்கு பதில் அளிக்கும் விதமாக, இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யக் கூடிய பொறுப்பு மாநகர காவல் துறையினருக்கு தான் உண்டு என்றும், மேலும் இது குறித்து மாநில காவல்துறை தான் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார் ராஜேஷ் லக்கானி.
மேலும், இடை தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக யாரெல்லாம் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி அதற்கான தீர்வு காண வேண்டியது மாநில காவல் துறை தான் என குறிப்பிட்ட, ராஜேஷ் லக்கானி, தேர்தல் ஆணையமும் தொடர்ந்து இது குறித்து கண்காணித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.