
சசிகலாவின் தலைமையும் தினகரனின் ஆளுமையும்தான் தங்களின் பலம் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனை விட 11075 வாக்குகள் அதிகம் பெற்று தினகரன் முன்னிலை வகிக்கிறார். மொத்தம் 19 சுற்றுகளாக ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 5 சுற்றுகளின் முடிவில், 24132 வாக்குகளை தினகரன் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 13057 வாக்குகளையும் திமுகவின் மருது கணேஷ் 6606 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
5 சுற்றுகளின் முடிவில், 11075 வாக்குகள் முன்னிலையில் தினகரன் வலுவான நிலையில் உள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, தேர்தலுக்கு முன் நாங்கள் சொன்னது போலவே ஒரு லட்சம் வாக்குகளைப் பெற்று, 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெறுவார்.
சின்ன எம்ஜிஆராக தினகரன் திகழ்கிறார். சசிகலாவின் தலைமையும் தினகரனின் ஆளுமையும்தான் தங்கள் தரப்பின் பலம் எனவும் புகழேந்தி தெரிவித்தார்.