
எடப்பாடி பழனிச்சாமியை கழக நிலையச் செயலர் பொறுப்பில் இருந்து நீக்கி, பாப்பிரெட்டிப் பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.பழனியப்பன் நியமிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.
அடுத்து, அதிமுக., அம்மா அணி பொருளாளர் பொறுப்பில் இருந்து திண்டுக்கல் சீனிவாசனை நீக்கிவிட்டு தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எம்.ரெங்கசாமியை நியமித்துள்ளார். இதனைத் இன்று காலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் தினகரன்.
காட்சிப்பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை தூக்கிவிட்டு பழனிசாமியை பதவியில் அமர்த்தினார் தினகரன் ஆனால் எடப்பாடியோ இதற்கு செக் வைக்கும் விதமாக நேற்றே தமிழக காவல்துறையை குடகுக்கு அனுப்பிவிட்டார்.
இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்ட சிலமணி நேரத்திலேயே பழனியப்பனை கைது செய்து ரகசியமான இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக தினகரன் என்ன செய்தாலும் அடுத்த சிலமணி நேரங்களிலேயே தனது பதிலடியை பலமாக கொடுக்க இடப்படியும் பன்னீரும் ஒரு தனி டீமே வைத்துள்ளார்களாம்.