திருவிழான்னா… பிக்பாக்கெட் வரத்தான் செய்வான்… காவல்துறையா… ஏவல்துறையா…? கேள்வி மேல் கேள்வி கேட்டு செக் வைத்த தினகரன்

First Published May 31, 2018, 2:32 PM IST
Highlights
dinakaran speech about police department


தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் மூன்றாவது நாளானா இன்று  பேரவையில் கல்ந்து கொள்ள வந்த டிடிவி சட்டபேரவை வளாகத்தில் டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது ரஜினி காவல்துறையை ஆதரித்து காவல்துறைமீது கைவைப்பவர்கள் மீது கடுமையாக தண்டிக்க வேண்டும் என கூறியவர் ரஜினியின் கருத்தை கடுமையாக சாடினார் டிடிவி தினகரன்.

இருபத்தைந்து டெட்பாடி ஏத்துனதா சொன்னாங்க இனிமேதான் போலீஸ்காரர்களின் மகிமை தெரியும். காவல்துறையை நாங்களும்தான் மதிக்கிறோம். காவல்துறை ஏவல் துறையா செயல்பட்டா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

போலீசை பத்தி சினிமா டயலாக் போல் பேசியிருக்கிறார். கருப்பு ஆடுகள் எல்லாத் துறையிலும் உண்டு. காவல்துறையும் விதி விலக்கு அல்ல என்றவர். திருவிழா என்று கூடினால் பிக்பாக்கெட் வரத்தான் செய்வான், போராட்டம்ன்னு மக்கள் திடீர் என்றா கூடினாங்க 100 நாளாக நடத்தி வருகிறாரகள் காவல்துறை, உளவுத்துறை, க்யூ பிரான்ஞ் இதெல்லாம் என்ன செய்துகிட்டு இருந்தது..? என கேள்வி எழுப்பினார்.

இறந்தவர்கள் எல்லாம் அப்பாவி பொதுமக்கள்தான். மணிராஜ் திருமணமாகி மூன்று மாதமே ஆனவரை பதினேழு வயது ஆனவரைத்தான் இந்த காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது. போராடிய யாவரும் அப்பாவி ஏழை எளிய மக்கள்தான் அவர்கள்  போராட்டத்திற்கு கட்சி கொடி தூக்கியோ அல்லது கட்சிகளின் பெயர் கொண்டு போராட்டத்திற்கு மக்கள் அனுமதிக்கவில்லை. தூத்துக்குடி போராட்டம் பற்றி தான் பார்த்ததை கூறினார் தினகரன்.

click me!