
தினகரன் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது 100 % உண்மை என டெல்லி போலீசார் அதிரடியாக தெரிவித்துள்ளனர்.
டெல்லி ஓட்டல் ஒன்றில் டெல்லி போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சுகேஷ் என்பவரிடம் இருந்து ரூ.1.30 கோடி பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவரை கைது விசாரணை நடத்தியதில் இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வாக்குமூலம் அளித்தார்.
அதன் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
டெல்லி குற்றப்பிரிவு போலீசாரின் முன்பு கடந்த 4 நாட்களாக டிடிவி தினகரன் நேரில் ஆஜரானார்.
இதையடுத்து டிடிவி தினகரன் நேற்று இரவு கைது செய்யபட்டார். பின்னர், இன்று டெல்லி ஹிஸ் தசாரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டார். அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இதையடுத்து தினகரன் தரப்பில் ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் தரப்பிலும் தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.
தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவிற்கு ஜாமீன் தர நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தினகரனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் டெல்லி போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், டெல்லி போலீஸார் அதிரடியாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது கூறியதாவது :
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
7 நாட்கள் எடுத்து விசாரித்தால் தான் உண்மை நிலை அறிய முடியும்.
4 நாட்கள் விசாரித்த விசாரணை போதுமானதாக இல்லை.
லஞ்சம் கொடுத்த முன்பணம் சென்னையில் இருந்து டெல்லி வந்ததிற்கான ஆதாரங்களும் திரட்டப்பட்டுள்ளன.
தினகரன் மீதான புகாருக்கு ஆதாரம் உள்ள்ளது.
பண பரிவர்த்தனை நடந்ததற்கான அனைத்து ஆதாரங்கள் உள்ளன.
தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரங்களும் உள்ளன.
ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது 100 சதவீதம் உண்மை.
டிடிவியை காவலில் எடுத்தால் தான் முழு ஆதாரங்களையும் திரட்ட முடியும்.
இவ்வாறு டெல்லி போலீஸ் கூறினார்.