
இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜர்படுத்தபட்டார். அவருக்கு காவலா பெயிலா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெல்லி ஓட்டல் ஒன்றில் டெல்லி போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சுகேஷ் என்பவரிடம் இருந்து ரூ.1.30 கோடி பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவரை கைது விசாரணை நடத்தியதில் இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வாக்குமூலம் அளித்தார்.
அதன் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து தினகரன் வீட்டிற்கு நேரில் சென்று சம்மன் அளித்தனர்.
அதன்படி டெல்லி குற்றப்பிரிவு போலீசாரின் முன்பு கடந்த 4 நாட்களாக டிடிவி தினகரன் நேரில் ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு டெல்லி போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
அதில் சுகேஷிடம் பேசியதை டிடிவி ஒப்புக்கொண்டார். இதையடுத்து டிடிவி தினகரன் நேற்று இரவு கைது செய்யபட்டார். நள்ளிரவு கைது செய்யப்பட்ட நிலையில், இன்று டெல்லி ஹிஸ் தசாரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டார்.
இதையடுத்து தினகரன் தரப்பில் ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதில் தினகரனுக்கு பெயிலா காவலா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்து நிற்கிறது.