
அரசுக்கு எதிராக உண்ணாவிரவிரதம் இருக்கப்போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்த முன்னாள் போக்குவரத்துதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
கரூரை அடுத்த வாங்கல் குச்சிபாளையத்தில், அரசு மருத்துவக்கல்லூரியை அமைக்கவேண்டுமென தொடர்ந்து போராடி வருகிறார் செந்தில்பாலாஜி.
ஏற்கனவே உண்ணாவிரத போராட்டம், வரும் 28 ஆம் தேதி நடக்கும் என அறிவித்திருந்த நிலையில் காவல் துறை அனுமதி வழங்காததால், அனுமதி கோரி சென்னை ஐகோர்ட் கிளை மதுரையில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
28 ஆம் தேதி வழக்கின் தீர்ப்பு வந்ததும் நிச்சம் உண்ணாவிரதம் இருப்பேன் என தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்ரமணியம் தம்முடன் இருப்பதை செந்தில் பாலாஜி சுட்டிக்காட்டியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் கிங்காக வலம் வந்த செந்தில் பாலாஜியை தற்போதைய எடப்பாடி அரசு கண்டு கொள்ளாததால் செம கடுப்பில் இருப்பதாக தெரிகிறது.
இதே போல, கரூர் மற்றும் ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு ஏராளமான பணத்தை வாரி இறைத்துள்ள செந்தில் பாலாஜிக்கு, முக்கிய பொறுப்பு கொடுக்கப்படவிருந்ததாம் ஆனால் இடையில் களேபரத்தில் கண்டு கொள்ளாமல் கைவிடப்பட்டார்.
இந்த நிலையில் மருத்துவக்கல்லூரி அமைக்க கோரி உண்ணாவிரதம் அறிவித்திருந்தார். ஆனால் உள்ளூர் எதிரியான விஜயபாஸ்கரை எதிர்த்து போராட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டதால் போராட்டத்தில் குதித்துள்ளார்.
அரசுக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே வழக்கு தொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக உண்ணாவிரதமிருக்க நீதிமன்றம் அனுமதியளித்தால் அது எடப்பாடி அரசுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.