நீயா? நானா? போட்டியில் வென்ற டெல்லி போலீஸ்... தினகரனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Asianet News Tamil  
Published : Apr 26, 2017, 03:57 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
நீயா? நானா? போட்டியில் வென்ற டெல்லி போலீஸ்... தினகரனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

சுருக்கம்

Dinakaran sent to 4 days police custodydelhi court approved

இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜர்படுத்தபட்டார். அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் டெல்லி போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லி ஓட்டல் ஒன்றில் டெல்லி போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சுகேஷ் என்பவரிடம் இருந்து ரூ.1.30 கோடி பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவரை கைது விசாரணை நடத்தியதில் இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வாக்குமூலம் அளித்தார்.

அதன் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து தினகரன் வீட்டிற்கு நேரில் சென்று சம்மன் அளித்தனர்.

அதன்படி டெல்லி குற்றப்பிரிவு போலீசாரின் முன்பு கடந்த 4 நாட்களாக டிடிவி தினகரன் நேரில் ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு டெல்லி போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

அதில் சுகேஷிடம் பேசியதை டிடிவி ஒப்புக்கொண்டார். இதையடுத்து டிடிவி தினகரன் நேற்று இரவு கைது செய்யபட்டார். நள்ளிரவு கைது செய்யப்பட்ட நிலையில், இன்று டெல்லி ஹிஸ் தசாரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டார். அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதையடுத்து தினகரன் தரப்பில் ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் தரப்பிலும் தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவை  7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவிற்கு ஜாமீன் தர நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தினகரனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் டெல்லி போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

விசாரணைக்காக சென்னை, கொச்சி, பெங்களூர் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்ல உள்ளனர் டெல்லி போலீசார்.

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

தவெக விஜய்யை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள்: செங்கோட்டையன் தடாலடி
ஆட்சியைக் காத்தவருக்கே அல்வா? - தனபாலைத் தவிக்கவிட்ட எடப்பாடி! முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு இழைக்கப்பட்டதா துரோகம்.?!