
அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது, எனக்கு அதிமுகவில் எதிரிகளே கிடையாது என கூறினார்.
இதுதொடர்பாக டிடிவி.தினகரன் கூறியதாவது:-
அதிமுகவில் உள்ள அனைவரும் எனது நண்பர்கள். நாங்கள் எல்லோரும் சகோதரர்கள். இதில், என்னை சந்திப்பவர்தான் எனக்கு வேண்டியவர். சந்திக்கதவர்கள் எனக்கு வேண்டாதவர்கள் என்பதெல்லாம் கிடையாது.
எனக்கு ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என யாரும் கிடையாது. இது எங்களது இயக்கம். நானும் இந்த இயக்கத்திலே ஒரு அங்கம். எல்லோரையும் நமது கட்சி என பார்க்க கூடியவன்.
ஒரு சிலருக்கு, எல்லோருக்கும் ஒற்றை கருத்து இருக்ககாது. இல்லாதவர்களும் கூட நமது சகோதரர் என்று நினைக்க கூடியவன் நான். இதனால் இதில் வேண்டியவர், வேண்டாதவர் என்ற எண்ணத்தில் சொல்லவில்லை.
கட்சி ஒன்றாக இருக்க வேண்டும். ஆட்சி சிறப்பாக நடைபெற வேண்டும். பிரிந்தவகள் இணைந்து கட்சி வலுப்பட வேண்டும் என்ற காரணத்துக்காக ஒதுங்கி இருப்பதாக கூறினேன். உங்கள் அனைவர் எதிரிலேயும் கூறினேன்.
ஆனால், அதில் எந்த ஒரு முன்னேற்றமும், ஒரு சிறிதளவுகூட முன்னேற்றமும் இல்லாமல், வாய்க்கு வந்தது என்றபடிபேசி கொண்டு இருக்கிறார்கள். எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை.
அதனால், நாம் பார்த்து கொண்டு சும்மா இருப்பது நன்றாக இருக்காது. நாமும் தொண்டர்களுடன் சேர்ந்து தொண்டர்களின் கோரிக்கைகளை ஏற்று நாம் கட்சியை இணைக்கவே முயற்சி செய்ய வேண்டும்.
அதற்கான கருத்துகளை எண்ணங்களை பொதுச் செயலாளரிடம் கூறி, அவரது அனுமதியுடன் செயல்பட இருக்கிறேன். என்றுதான் கூறினேன். வேறு எதுவும் நான் கூறவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.