
அமைச்சர்கள் என்னை பற்றி தெரிவித்த கருத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் பதில் அளிக்கவேண்டும் என சசிகலாவை சந்திக்க செல்லும் முன் தினகரன் பேட்டியளித்துள்ளார்.
இரட்டை இலையை கைப்பற்ற லஞ்சம் கொடுத்த புகாரில் கைதாகி டெல்லி திஹார் சிறைக்கு சென்று நிபந்தனை ஜாமினில் திரும்பிய தினகரன், சென்னை வந்ததும் தனது அடுத்தகட்ட வேலைகளில் இறங்கியுள்ள தினகரன் இன்று காலை சசிகலாவைச் சந்திப்பதற்காக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு புறப்பட்டுள்ளார்.
பெங்களுருக்கு சாலை மார்ககமாக செல்வதற்க்கு முன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;
பெங்களூருவுக்கு சென்று முதலில் சித்தியை சந்திக்கிறேன், பொது செயலாளரை துணை பொது செயாலாளராக சந்திக்கிறன். வருங்கால செயல்பாடுகள் குறித்து ஆலோசணை பெற்று தொடர்ந்து செயல்படுவேன். அமைச்சர்கள் என்னை பற்றி தெரிவித்த கருத்து முதல்வர்தான் பதில் அளிக்கவேண்டும்.
மேலும் ஆட்சியையும் கட்சியையும் பலபடுத்தும் கடமை எனக்கு உள்ளது. அதற்காக சசிகலாவிடம ஆலோசணை பெறுவேன். என் மீது போடப்பட்ட வழக்கை சட்ட ரீதியாக எதிர் கொண்டு நிரபாரதி என நிருப்பிப்பேன். ஆர் கே தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மன நிலையில் நான் தற்போது இல்லை என்று கூறினார்.