என்ன கோவம்? இதில வேற இவரு தியானம் செய்கிறாராம்! ஆன்மீக அரசியலின் அஸ்திவாரத்தை சீண்டிய தினா...

First Published Jun 1, 2018, 12:41 PM IST
Highlights
Dinakaran said All of the meditation must be made to the soul


ரஜினியின்  பேட்டிய  நானும் தான் பார்த்தேன். எதுக்கு கோவம் வருது? இதில வேற இவரு தியானம் செய்கிறாராம் ரஜினியின் ஆன்மீக அரசியலை அக்கு அக்காக பிரித்து மேய்ந்துள்ளார் தினகரன்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயம்பட்டவர்களையும் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார் நடிகர் ரஜினிகாந்த், அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் யார் நீங்க? 100 நாள் வராமல் தற்போது ஏன் இங்கு வந்தீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதன் பின்னர்,  தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி,  ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை வெடித்தற்கு சமூக விரோதிகளே காரணம் என குற்றம்சாட்டினார். அவரது கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், சென்னை திரும்பிய ரஜினியிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கோபத்துடன் ஆவேசமாக பதிலளித்தார். தொடர்ந்து அவரை நோக்கி இதே கேள்விகளை கேட்டதால் ஒரு கட்டத்தில் நிதானமிழந்த ரஜினி, செய்தியாளர்களை பார்த்து மிரட்டும் வகையில், ‘’ யே!’’ வேறு ஏதாவது கேள்விகள் இருக்கா? என ஆவேசமாக கத்திவிட்டு நடையை கட்டினார்.

இதுகுறித்து, சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே.நகர் எம்எல்ஏ தினகரன், தமிழிசையின் குரலாகவும், தமிழக அரசின் குரலாகவும்தான் ரஜினி பேசியுள்ளார். இது என்ன சினிமா சூட்டிங்கா, எழுதி கொடுத்ததையெல்லாம் பேசுவதற்கு? அவர் பேட்டி கொடுத்த வீடியோவை நானும் தான் பார்த்தேன். எதுக்கு கோவம் வருது? இதில வேற இவரு தியானம் செய்கிறாராம்.

அவருக்கு 68 வயதாகிறது, தியானம் எல்லாம் ஆன்மாவுக்கு தான் பண்ணனும். என்னை கூட மடக்காத்தான் பத்திரிகையாளர்கள் அப்பப்போ கேள்வி கேட்கிறார்கள். நான் எப்போதாவது கோவப்பட்டேனா? எந்த ஒரு மனிதனின் சுயரூபம் எப்படியும் வெளிப்பட்டுவிடும். 3 மாதம், 6 மாதங்களில் யாராக இருந்தாலும் உண்மை வெளியாகிவிடும் என ஆன்மீக அரசியல் பேசும் ரஜினியின் அஸ்திவாரத்தை சீண்டி பார்த்துள்ளார் தினகரன்.

click me!