
துப்பாக்கிச் சூட்டின் போது உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா..? சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி. ஜூன் 6ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். அதில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கி சூடு நடத்த அதற்கான முறைப்படி காவல்துறை நடந்து கொண்டார்களா..? என பல்வேறு கேள்விகளை தமிழக அரசு மீது எழுப்பியுள்ளது நீதிமன்றம்.
துப்பாக்கி சூட்டுக்கு முன் கண்ணீர் புகை வீசி குண்டு மற்றும் தண்ணீர் பீச்சி கூட்டத்தை கலைக்கவேண்டும். பின் பிளாஸ்டிக் தோட்டா கொண்டு சுட்டிருக்க வேண்டும் அதன்பின் வானைத் நோக்கி மூன்று முறை சுட்டு எச்சரிக்கை செய்யவேண்டும் அதன்பின்னும் முட்டிக்கு கீழ் தான் சுடவேண்டும். இப்படியான வழிமுறைகள் ஏதும் அரசு கையாளவில்லையென மனுதாரர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டினை செய்தி சேனல்கள் அனைத்தும் காட்டியுள்ள நிலையில் இறந்தவர்கள் அனைவரும் நெஞ்சிலும் வாயிலும் குண்டடிபட்டு இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உயர்நீதி மன்ற கேள்விகளுக்கு ஜூன் 6க்குள் தமிழக அரசு பதிலளிக்கவேண்டும்.