532  கோடி ரூபாயை அள்ளிய பாஜக….. எதற்கு தெரியுமா ?

Asianet News Tamil  
Published : Jun 01, 2018, 12:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
532  கோடி ரூபாயை அள்ளிய பாஜக….. எதற்கு தெரியுமா ?

சுருக்கம்

BJP got donation from somebody 532 creores last year

மத்தியில் ஆளும் பாஜக கடந்த 2016 – 17 ஆம் ஆண்டில் 532 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 7 மடங்கு அதிகம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும், 2016-17-ம் ஆண்டில் பாஜக பெற்ற நன்கொடை 7 மடங்கு அளவிற்கு உயர்ந்துள்ளது. 2015-16ஆம் ஆண்டில் பாஜக ரூ. 76 கோடியே 85 லட்சம் மட்டுமே நன்கொடை பெற்றிருந்த நிலையில், 2016 -17 ஆம் ஆண்டில் ரூ. 532 கோடியே 27 லட்சமாக அதிகரித்துள்ளது.இது, மற்றொரு முக்கியக் கட்சியான காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடையைக் காட்டிலும் 9 மடங்கு அதிகமாகும்.

கடந்த 2016-17 ஆம் ஆண்டில் தேசியக்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ரூ. 710 கோடி அளவிற்கே நன்கொடை பெற்றுள்ளன. இதில், பாஜக மட்டும் ரூ. 532 கோடியே27 லட்சத்தை அள்ளிக் குவித்துள்ளது.

பாஜக பெற்ற இந்த நன்கொடையில் ரூ. 464 கோடியே 84 லட்சத்திற்கு, நன்கொடை எந்த வகையில் வந்தது? யார் நன்கொடை அளித்தவர்கள்? என்று விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) மற்றும் தேசிய தேர்தல்கண்காணிப்பு அமைப்பு ஆகியவை இணைந்து, கடந்த 2016-17 ஆம் ஆண்டில், ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

PREV
click me!

Recommended Stories

அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!
தமிழ் நாட்டில் இருந்து வந்த புழு..! பூச்சி அண்ணாமலை எங்களை மிரட்டுவதா..? வெடிக்கும் சிவசேனா..!