"என் குரல் மாதிரியை பதிவு செய்ய அனுமதிக்க மாட்டேன்" - டெல்லி நீதிமன்றத்தில் அடம்பிடித்த தினகரன்

Asianet News Tamil  
Published : May 20, 2017, 03:19 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
"என் குரல் மாதிரியை பதிவு செய்ய அனுமதிக்க மாட்டேன்" - டெல்லி நீதிமன்றத்தில் அடம்பிடித்த தினகரன்

சுருக்கம்

dinakaran refused to record his voice sample

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற காவலில் இருக்கும் தினகரன் குரல் பதிவு மாதிரியை பதிவு செய்ய தினகரனின் விருப்பத்தை கேட்க டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார்.

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, டெல்லியில் ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த மாதம் 16-ம் தேதி கைது செய்தனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.

சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் கடந்த மாதம் 25-ம் தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் இன்று குரல் மாதிரி பதிவு பதிவு செய்ய தினகரனின் விருப்பத்தை கேட்க டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர் படுத்தப்பட்டார்.

அப்போது குரல் மாதிரியை பதிவு செய்ய தினகரன் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.குற்றவியல் சட்டத்தில் குரல் மாதிரியை பதிவு செய்ய விதிகள் இல்லை எனவும் தினகரன் கூறியதாக தெரிகிறது. மேலும் தன குரல் மாதிரியை பதிவு செய்ய தனக்கு விருப்பம் இல்லை எனவும் தினகரன் டெல்லி நீதிமன்றத்தில் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

6 மணி நேரம் விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' கேள்வி.. நடந்தது என்ன?
தேர்தல் நடத்தை விதிகள் அமல்.. என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது? முழு விபரம் இதோ!