தாருமாறு செய்வதெல்லாம் செம்ம ஜோரு! அச்சுஅசலாய் ஜெயலலிதாவை காப்பியடிக்கும் தினா!

By sathish kFirst Published Sep 10, 2018, 11:10 AM IST
Highlights

திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் பட்டாசுக்கு திரிகிள்ளப்பட்டு விட்டது. இந்த தேர்தலில் மும்முனை போட்டியா? இருமுனை போட்டிதான்! என்றெல்லாம் ஆளாளும் விவாதம் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். 

இடை தேர்தல் தேர்வெழுத தாய் கழகமான அ.தி.மு.க. இன்னமும் பிள்ளையார் சுழியே போடவில்லை, ஆனால் அ.ம.மு.க.வின் தலைவரான தினகரனோ மெயின் சீட்டை எழுதி நிரப்பிவிட்டு, எக்ஸ்ட்ரா பேப்பர் கேட்டு தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்.  இன்னாபா சொல்ற? அப்படின்னு மெர்சலாவோர் மேலும் வாசியுங்கள்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் பட்டாசுக்கு திரிகிள்ளப்பட்டு விட்டது. இந்த தேர்தலில் மும்முனை போட்டியா? இருமுனை போட்டிதான்! என்றெல்லாம் ஆளாளும் விவாதம் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். 

அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. என இரண்டு வலிமையான கட்சிகளுக்குள்தான் பொதுவாக தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் மல்லுக்கட்டு சூடு பறக்கும். ஆனால் இப்போதோ தினகரனின் அ.ம.மு.க.வை புறந்தள்ளிவிட்டு அரசியலே பேசமுடியாத சூழல் உருவாகியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வை டெபாசீட் இழக்க வைத்தவர், அ.தி.மு.க.வை மிக மோசமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். அந்தவகையில் இன்று தமிழக அரசியலின் டிரெண்டிங்கில் இருக்கிறது அ.ம.மு.க. 

இந்நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் போஸ் ஆகியோர் இறந்ததால் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல்கள் நெருங்கி வர துவங்கியுள்ளது. ’இரு தொகுதிகளிலும் நிச்சயம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்போம்!’ என்று நெத்தியடியாக சொல்லிவிட்டு களமிறங்கியிருக்கிறார் தினா. ஆனால் எடப்பாடியார் தரப்பும், ஸ்டாலின் வகையறாவும் இதை வெற்றுக் கூச்சலாகத்தான் கணக்கு போட்டுக் கொண்டிருந்தனர். 

இரு கழகங்களும் இந்த தொகுதிகளில் யாரை நிறுத்தலாம்? என்று அசமந்தமாக அசை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அத்தொகுதிகளில் தான் பிரச்சாரம் சென்று வருவதற்காக ஸ்பெஷல் வேனையே ரெடி செய்து, அதில் ஏறி நின்று ரிகர்சலும் பார்த்து அசத்தியிருக்கிறார் தினகரன். 

தமிழகத்தை பொறுத்தவரையில் அரசியல் தலைவர்களின் பிரச்சார வாகனங்கள் தயாராவது கோயமுத்தூரில்தான். அங்கிருக்கும் ‘கோயாஸ்’ எனும் நிறுவனம்தான் இவற்றை ரீ டிஸைன் செய்து கொடுக்கும். கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், அழகிரி, பி.ஜே.பி. முக்கியஸ்தர்கள் என்று ஹாட் தலைவர்கள் அத்தனை பேருக்கும் இங்குதான் பிரச்சார வேன் தயாராகுவது வாடிக்கை. 

இந்நிலையில் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக ஸ்பெஷல் வேன் ஒன்றை இங்கே ரீ டிஸைன் செய்து வாங்கியிருக்கிறார் தினகரன். தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து மண்டலத்துக்கு ஒரு வாகனம் என நான்கு வாகனங்கள் தயாராகி இருக்கிறதாம். அதில் முதல் வாகனம் சென்னையிலிருக்கும் தினகரன் வீட்டை சென்றடைந்துவிட்டது. கோவையிலிருக்கும் அ.ம.மு.க. நிர்வாகிகள் அதை டெலிவரி எடுத்து, பயபக்தியாக பூஜைகள் முடித்து அனுப்பி வைத்தனர். சென்னையில் தன் வீட்டை வந்தடைந்த இந்த வேனில் ஏறி நின்று, கை கூப்பி ‘கீழே இருந்து பார்த்தா நான் க்ளீனா தெரியுறேனா?’ என்றெல்லாம் சின்னக்குழந்தை போல் கேட்டு, பார்த்து பார்த்து பரவசமாகியிருக்கிறார் தினகரன். 

இனிதான் வருது மிக முக்கிய மேட்டர். அதாவது ஜெயலலிதாவுக்கு தயாரான பிரச்சார வேனில் தூங்கும் வசதி, இண்டர்நெட் வசதி, வாஷ் ரூம் உள்ளிட்ட பல விஷயங்கள் உள்ளேயே இருக்கும். இப்போது தினாவுக்கு தயாராகி இருக்கும் வாகனமும் அப்படியெ ஜெ., வாகனம் போலவே எக்ஸ்ட்ரா ஸ்பெஷலோடு உருவாக்கப் பட்டிருக்கிறதாம். சிலபல லட்சங்களை விழுங்கி ரீ டிஸைன் செய்யப்பட்டிருக்கும் இந்த வாகனத்தினுள் அமர்ந்து கொண்டு எல்லாவிதமான பணிகளையும் மேற்கொள்ள முடியுமாம். 

திடீர் விபத்துக்களை எதிர்கொண்டு தாங்கி நிற்கும் பம்பர், இரவிலும் பெரும் வெளிச்சத்தை உமிழும் எக்ஸ்ட்ரா முன் விளக்குகள், மேலே நிற்கும் நபர் துல்லியமாய் தெரியும் வகையில் உட்புறமிருந்து ஒளி வீசும் விளக்குகள், பேசுபவரின் வார்த்தைகள் தெளிவாய் விழ உதவும் ஹைடெக் ஸ்பீக்கர்கள், முன் இருக்கையில் வி.ஐ.பி.உட்கார்ந்து வருகையில் அவர்களின் முகத்தை தூளாக ஹைலைட் பண்ணிக்காட்டிட ஸ்பெஷல் விளக்குகள், மைக் என்று ஏகப்பட்ட வசதிகள் அப்படியே ஜெ., வாகனம் போலவே உருவாகி இருக்கிறதாம். அம்மா செண்டிமெண்டு நிச்சயம் தினாவை ஜெயிக்க வைக்கும் என்று அவர் கட்சியினர் நம்புகின்றனர். 

இவை எல்லாவற்றையும் செக் செய்து பார்த்துவிட்டு செம்ம ஹேப்பி ஆகிவிட்டாராம் தினா. ‘இடைத்தேர்தலென்ன, நாடாளுமன்ற பிரச்சாரத்துக்கே இப்பவே நான் ரெடி’ என்று குதூகலித்திருக்கிறார்.  தினகரனின் இந்த தடாலடி பாய்ச்சலை கண்டு பதறி பம்மியிருக்கிறது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இரண்டும். 

பந்தயத்துல முதல்ல வேகமா ஓட ஆரம்பிச்சவன் முதல் ஆளா வெற்றிக்கோட்டை தொடுவான்னு ஒரு நம்பிக்கை இருக்குது! என்று சூசகமாக தங்களின் வெற்றி நம்பிக்கையை பகிர்கிறார்கள் அ.ம.மு.க.வினர்.  என்ன நடக்கிறதென கவனிப்போம்!

click me!