விளைவு வேறு மாதிரி இருக்கும்... எடப்பாடியை அதிரவைத்த விஜயபாஸ்கர்....

By sathish kFirst Published Sep 10, 2018, 10:30 AM IST
Highlights

சட்டத்துக்கு புறம்பாக நடைபெற்ற குட்கா வியாபரம் தொடர்பான வழக்கில் சிபிஐ இடம் வசமாக மாட்டி இருக்கிறார் மாதவராவ். தொடர்ந்து நடை பெற்ற சிபிஐ விசாரணையில் அப்ரூவலாக மாறி இருக்கும் மாதவராவால் ஆட்டம் கண்டு போய் இருக்கிறது ஆளும் கட்சி. 

சட்டத்துக்கு புறம்பாக நடைபெற்ற குட்கா வியாபரம் தொடர்பான வழக்கில் சிபிஐ இடம் வசமாக மாட்டி இருக்கிறார் மாதவராவ். தொடர்ந்து நடை பெற்ற சிபிஐ விசாரணையில் அப்ரூவலாக மாறி இருக்கும் மாதவராவால் ஆட்டம் கண்டு போய் இருக்கிறது ஆளும் கட்சி. 

இந்த குட்கா விவகாரத்தினால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி.ராஜேந்திரன் மற்றும் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரின் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்தி இருக்கிறது சிபிஐ. 

பதவியில் இருக்கும் டிஜிபி-ன் வீட்டில் சிபிஐ நடப்பது என்பது இந்தியாவிலேயே  வேறு எங்கு நடைபெற்றதில்லை.
இந்த ரெய்டை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனும் சூழல் தற்போது நிலவுகிறது. இதில் டிஜிபி க்கு குடியரசு தலைவர் பணி நியமனம் கொடுத்திருப்பதால் அவரை சிபிஐ கைது செய்வதற்கான வாய்ப்பு குறைவு. 

எனவே தான் விஜயபாஸ்கர் மீது இப்போது அனைவரின் கவனமும் இருக்கிறது. இதனிடையே டிஜிபி.ராஜேந்திரன் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து தான் ராஜினாமா செய்யவிருப்பதாக தெரிவித்திருக்கிறார். 

ஆனால் அவர் ராஜினாமா செய்த பிறகு, வரும் சூழல் ஆட்சிக்கு சாதகமாக இருக்காது. பிறகு ஒவ்வொருவராக இந்த வழக்கில் கைதாகி ஆட்சிக்கே ஆபத்தாகிவிடும் என்பதால் டிஜிபி-ன் ராஜினாமாவை மறுத்திருக்கிறார் எடப்பாடி. டிஜிபி. ராஜேந்திரன் கடந்த 2017ன் போதே பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். அதன் பிறகு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படியும் தமிழக காவல்துறை சட்டத்தின்படியும் , இரண்டு வருட பணி நீட்டிப்பில் தற்போது பதவியில் இருக்கிறார்.

 

வரும் 2019 ஜீன் கடைசியில் தான் அந்த இரண்டாண்டு பணி நீட்டிப்பு முடிவடையும். இதனிடையே தற்போது இருக்கும் சூழலை கருத்தில் கொண்டு இப்போதே விருப்ப ஓய்வு பெறலாமா? என்றும் ஆலோசித்து வருகிறார் டிஜிபி.ராஜேந்திரன். இது ஒரு பக்கம் இருக்க அதிமுக அமைச்சர்கள் பலரும் விஜயபாஸ்கரை ராஜினாமா செய்ய வைத்தால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடுமே என எடப்பாடியிடம் கூறி இருக்கின்றனர். 

இது போக எதிர்கட்சி வேறு இந்த விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஓபிஎஸ்-ம் கூட விஜயபாஸ்கரை ராஜினாமா செய்ய வைக்கும் எண்ணத்தில் தான் இருக்கிறாராம். ஆனால் முதல்வர் தான் இதுவரை எந்த முடிவும்ம் இந்த விஷயத்தில் எடுக்காமல் பொறுமைகாத்து வருகிறார்.


ஆனால் எடப்பாடியின் வீட்டிற்கு அருகில் இருக்கும் விஜயபாஸ்கருக்கு , அதிமுக அமைச்சர்களின் வருகை , அவர்களின் கோரிக்கை எல்லாம் என்ன என்பது தெரியவந்திருக்கிறது. இதனால் எடப்பாடியை நேரில் சென்று சந்தித்த விஜயபாஸ்கர் ”என்னை ராஜினாமா செய்ய வைக்க எல்லாரும் சேர்ந்து போடும் திட்டம் எனக்கு தெரியாமல் இல்லை! இந்த இடத்தில் உங்கள் இனத்தவர் இருந்திருந்தால் இப்படி யோசித்திருப்பீங்களா? ஆர்கே நகர் பிரச்சனையில் கூட எல்லா அமைச்சர்களின் பெயரும் இருக்கதான் செய்யுது. 

அதுக்காக எல்லாரும் ராஜினாமா செஞ்சிட்டாங்களா?. அப்படி செய்ய தான் முடியுமா?.
என் விஷயத்தில் மட்டும் எதுக்கு இந்த பாகுபாடு. என்னால் ராஜினாமா எல்லாம் செய்ய முடியாது. இந்த வழக்கு எப்படி இருந்தாலும் நான் அதை நீதிமன்றத்தில் பார்த்துக்கறேன். அதையும் தாண்டி வேறு ஏதாவது எனக்கு எதிராக செய்ய நினைத்தால், விளைவு வேறு மாதிரி ஆகிடும் என எச்சரித்துவிட்டு சென்றிருக்கிறாராம்  இதனால் விஜயபாஸ்கர் விஷயத்தில் என்ன செய்வது? இந்த விவகாரம் இன்னும் என்ன? என்ன? பிரச்சனைகளை கொண்டுவருமோ? என கலக்கத்தில்  இருக்கிறாராம் எடப்பாடி.

click me!