
அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை இன்று சந்தித்துப் பேசினார். அவருடன் 9 எம்எல்ஏக்களும் உடன் சென்றனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதையடுத்து, சசிகலா தனது அக்காள் மகனான டி.டி.வி.தினகரனை, அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமித்துவிட்டு சிறை சென்றுவிட்டார்.
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடக்க முயன்ற வழக்கில் தினகரன் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு நேற்று முன்தினம் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று தினகரன் கூறி வந்த நிலையில் தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சசிகலாவிடம் ஆலோசிப்பதற்காக இன்று பெங்களூரு பரபப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து சசிகலாவை டி.டி.வி.தினகரன் அவரது மனைவி அனுராதா ஆகியோர் தற்போது சந்தித்து வருகின்றனர்.
இதையடுத்து எம்எல்ஏ க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன்,ஜக்கையன், கதிர்காமு, தங்கதுரை, பாலு, இன்பதுரை, பார்த்திபன் ஆகிய 9 எம்எல்ஏக்களும், கோவை எம்.பி. நாகராஜன், புகழேந்தி ஆகியோரும் சசிகலாவை சந்திக்க உள்ளனர்.
பெங்களூரு சிறையில் சசிகலா – டி.டி.வி.தினகரன் சந்திப்பு நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் முதலமைச்சருடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.