
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அமைக்கப்பட்டுள்ள சசிகலா, மன்னார்குடி திவாகரனின் மகன் ஜெய ஆனந்த் திருமணத்தில் பங்கேற்பதற்காக பேரோலில் வெளியே வருகிறார். இதற்காக சிளை அதிகாரிகளிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதையடுத்து, தனது அக்காள் மகனான டி.டி.வி.தினகரனை, அதிமுகவின் துணைப் பொதுச் செயராளராக நியமித்துவிட்டு சிறை சென்றுவிட்டார்.
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடக்க முயன்ற வழக்கில் தினகரன் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு நேற்று முன்தினம் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று தினகரன் கூறி வருகிறார். இதையடுத்து தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சசிகலாவிடம் ஆலோசிப்பதற்காக இன்று பெங்களூரு சிறைக்கு தினகரன் சென்றுள்ளார்.
இதனிடையே சிறையில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைணை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா? இல்லையா என்பது குறித்து இன்று அல்லது நாளைக்குள் முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய ஆனந்த்துக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திவாகரன் செய்து வருகிறார்.
இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, சசிகலா மன்னார்குடிக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து சிறையிலிருந்து சசிகலா பபேராலில் வெளிவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருமணத்துக்கு செல்ல பரோலில் அனுமதிக்க வேண்டும் என சிறை அதிகாரிகளிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பெளியாகியுள்ளன. பரோலில் செல்ல அனுமதி கிடைக்குமா ? நீதிமன்றமும், சிறைத் துறையும் தான் முடிவு செய்ய வேண்டும்.