பிடிச்சு வெச்ச பிள்ளையார்! கசாப்புக் கடைக்காரர்: வில்லங்கத்தை விலைக்கு வாங்கும் "மிஸ்டர் கூல் தினா"!

Asianet News Tamil  
Published : Sep 20, 2017, 05:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
பிடிச்சு வெச்ச பிள்ளையார்! கசாப்புக் கடைக்காரர்: வில்லங்கத்தை விலைக்கு வாங்கும் "மிஸ்டர் கூல் தினா"!

சுருக்கம்

dinakaran criticizing Speaker and Governor

’தானா சேரும் கூட்டத்தை தானே கெடுத்துக் கொள்வார் போலிருக்கிறது தினகரன்’ என்று புலம்ப துவங்கியிருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். காரணம்!? அதிரடி விமர்சனம் எனும் பெயரில் மிக பாந்தமான பொறுப்பில் இருக்கும் மனிதர்களை அபத்தமாக திட்டுவதுதான். 

இன்று மீடியாவை சந்தித்த தினகரன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில் ‘என்ன பண்றது, கவர்னரிடம் கோரிக்கை விடுத்தாச்சு ஆனால் அவர் பிடிச்சு வெச்ச பிள்ளையார் போல இருக்குறாரே!” என்று சொல்லி அதிர்ச்சி கொடுத்தவர் அடுத்த நொடியே சபாநாயகர் பற்றி பேசுகையில் “சட்டப்பேரவை தலைவர் தனபால் கசாப்புக் கடைக்காரர் மாதிரி செயல்படுகிறார். வெட்டி நீக்கி தள்ளுறார்.” என்று அடுத்த இடியை இறக்கியிருக்கிறார். 

இவைதான் அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. 
எங்கேடா தினகரன் சிக்குவார்! எப்படிடா அவர் மேல் வழக்கு போட்டு உள்ளே தள்ளி அவரது அணியின் செயல்பாட்டை முடக்கலாம் என்று அவரது அரசியல் வைரிகள் ஏங்கித் தவிக்கும் நிலையில் தினகரனே வாலண்டியராக வந்து இப்படி வாயைக் கொடுப்பது மிகப்பெரிய அபத்தம் என்று புழுங்கித் தவிக்கிறார்கள். 

இதுபற்றி ஒரு சீனியர் நிர்வாகி தினகரனிடமே சொல்ல ‘எல்லாம் பார்த்துக்கலாம்ணே!’ என்றாராம் பொசுக்கென்று. 
 

PREV
click me!

Recommended Stories

விஜய் மீது பாச மழை பொழியும் காங்கிரஸ்.. தவெக சொன்ன 'அந்த' ஒரு வார்த்தை.. கதர் சட்டையினர் குஷி!
கதிகலங்கும் திமுக...! சென்னையில் குவியும் ED-ஐடி அதிகாரிகள்..! வேட்டையை ஆரம்பித்த பாஜக..!