
ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் பொது செயலாளருக்கும் செய்த துரோகம் எந்த நதியில் மூழ்கினாலும் பாவம் போகாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மயிலாடுதுரை சென்றார். அங்கு காவிரி மகா புஷ்கர விழாவில் கலந்து கொண்டு புனித நீராடினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், நம்ப வைத்து துரோகமிழைத்தவர்கள் எந்த நதியில் மூழ்கினாலும் பாவம் போகாது என்று கூறியுள்ளார்.
அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், மாணவி அனிதாவிற்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும் என்று கூறினார்.
நம்ப வைத்து துரோகமிழைத்தவர்கள் எந்த நதியில் மூழ்கினாலும் பாவம் போகாது என்றும் பாவம் செய்தவர்கள் நதியில் மூழ்கினால் நதிதான் மாசுபடும் என்றும் டிடிவி கருத்து தெரிவித்துள்ளார்.
ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் பொது செயலாளருக்கும் செய்த துரோகம் எந்த நதியில் மூழ்கினாலும் பாவம் போகாது என்றும் தினகரன் கூறினார்.