
ஒட்டுமொத்தமாக திமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தாலும், எடப்பாடி அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என முன்னாள் தேர்தல் அதிகாரியாக இருந்த நரேஷ் குப்தா இந்த திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்
என்ன சொல்கிறது சட்டமன்ற விதி ?
சட்டமன்ற விதிகளின் படி, ஆளும் கட்சிக்கு கண்டிப்பாக எதிர்க்கட்சி இருக்க வேண்டும் என விதி இல்லையாம். அதாவது மெஜாரிட்டி இருந்தாலே போதுமானது. எனவே தற்போது மெஜாரிட்டி வைத்துள்ள எடப்பாடி அரசுக்கு எந்த பாதிப்பும் வர வாய்ப்பு இல்லை என முன்னாள் தேர்தல் அதிகாரி கருத்து தெரிவிதுள்ளார்.ஒரு வேளை ஒட்டுமொத்தமாக திமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தாலும், சட்டமன்றம்தொடர்ந்து நடைபெற்று தான் வருமாம். எனவே முக.ஸ்டாலின் தரப்பு எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தாலும்,எந்த பயனும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்
நடைபெறுமா ஆர்.கே. நகர் தேர்தல் ?
அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் ஆர்.கே நகர் இடைதேர்தல் நடத்த வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட தேதியில் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் உள்ளது என்றும் தெரிவித்தார்.
அதாவது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததன் காரணமாக காலியாக உள்ள 18 தொகுதிக்கும் சேர்த்து தான் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக திமுக எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என ஒரு எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது