
தனக்கு ஆதரவாக எந்தவித வற்புறுத்தலும் இல்லாமல் சொந்தவிருப்பதின் பெயரிலே விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்களை
மிரட்டுபவர்கள்மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தினகரன் தெரிவித்துள்ளார்.
குடகு விடுதியில் தங்கியுள்ள தனக்கு ஆதரவான எம்.எல்.ஏக்களை யாரையும் வற்புறுத்தி தங்கவைக்கவில்லை அவர்கள் அனைவரும் தங்களது சொந்த விருப்பத்திலேயே தங்கியுள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை காட்ட தரங்கெட்டு நடந்துகொள்கிறார். அதுமட்டுமல்ல காவல்துறையை விடுதிக்கு அனுப்பி எங்களது ஆதரவு எம்.எல்.ஏக்களை மிரட்டிவருகிறார்.
மேலும் தங்களுக்கு ஆதரவு அளித்தால் 20 கோடிரூபாய் வரை தருவதாக பேரம் பேசுகின்றனர். யாரும் ஒப்புக்கொள்ளாததால் பொய் வழக்கு போட்டு கைது செய்வோம் என மிரட்டிவருகின்றனர்.
இதனையடுத்து பேசிய அவர் ஆளுநரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளோம் வரும் 14 ஆம் தேதி வரை காத்திருக்கிறோம் அதன்பிறகு நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.