
தள்ளாத வயதில் மதுசூதனை தேர்தலில் நிறுத்தி சித்தரவதை செய்கிறார் பன்னீர்செல்வம்’ என்று அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச்செயலாளரும் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளருமான தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் நேற்று மாலை வாக்கு சேகரித்த அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், என் மீது பன்னீர் அணி வேட்பாளர் மதுசூதனன் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
பூனைக்குக் கண்ணை கட்டிவிட்டால் உலகம் இருண்டுவிடும் என்ற நினைப்பில் மதுசூதனன் உள்ளார். தோல்வி பயத்தில் உள்ளதால்தான் அவர் இப்படி எல்லாம் பேசி வருகிறார். முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஏறக்குறைய அனைத்து கட்சிகளிலும் இருந்து வந்துள்ளார்.
எனவே, அவரை பற்றி பேசுவது வீணானது. திமுக-வின் ‘பி’ டீம்தான் பன்னீர்செல்வம் டீம். இந்த தள்ளாத வயதில் மதுசூதனனை வேட்பாளராக நிறுத்தி அவரை சித்தரவதை செய்து கொண்டிருக்கின்றனர்.
புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாவின் வாக்கு வங்கியை உடைக்கவே பன்னீர்செல்வம் கடும் முயற்சி செய்து வருகிறார் என்று தெரிவித்தார்.