
எம்.ஜி.ஆர் நடித்த "குலே பகாவலி" படத்தில் இடம் பெற்ற "குல்லா போட்ட நவாபு... செல்லாது உங்க ஜவாபு" என்ற பாடலை பாடித்தான் ஆர்.கே.நகரில் தினகரனை கலாய்த்து வருகிறது திமுக.
முரசொலியில், சிலந்தி பதில்கள் பகுதியில் கூட, இது குறித்து நகைச்சுவையுடன் எழுதப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் என்பது அதிமுக கோட்டை. அம்மாவை நேசிக்கும் தொண்டர்களும் பொது மக்களும் அதிகம் வாழும் தொகுதி.
அதனால் அதிமுகவின் ஒரு ஓட்டு கூட பன்னீருக்கோ, தீபாவுக்கோ சென்றுவிடக் கூடாது என்று அமைச்சர்களுக்கு தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், அதிமுக என்பது சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி என இரண்டாக பிரிந்துள்ளதுடன், தீபாவும் களத்தில் குதித்துள்ளார்.
அதனால், அதிமுக ஓட்டுக்கள் மூன்றாகப் பிரியும், அது எதிர்க்கட்சியான திமுகவுக்கே சாதமாக இருக்கும் என்பது ஸ்டாலின் கணக்கு.
ஆர்.கே.நகரில், தினகரன் வாக்காளர்களுக்கு என்னதான் கொட்டி கொடுத்தாலும், சசிகலா மீதுள்ள மக்களின் ஆத்திரம், எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும் என்றும் அவர் நினைக்கிறார்.
ஆகவே, தொப்பி சின்னத்தை நினைவூட்ட, தலையில் தொப்பி என்ற குல்லாவுடன் வலம் வந்து வாக்கு சேகரித்து வருகிறார் தினகரன்.
அவர் என்ன செய்தாலும், ஜெயிக்க பயவதில்லை என்பதை கேலி செய்யும் விதமாகவே, "குல்லா போட்ட நவாபு...செல்லாது உங்க ஜவாபு" முரசொலியில் சிலந்தி நகைத்துள்ளது.