’திமுக வெற்றி பெற்று விடுமா..? ஆர்.கே.நகர் மறந்து போயிடுச்சா..?’ டி.டி.வி.தினகரன் அதிரடி சவால்..!

By Thiraviaraj RMFirst Published Jan 27, 2019, 4:38 PM IST
Highlights

ஆர்.கே.நகர் தேர்தலை போல கணிப்புகளை முறியடித்து க்களவை தேர்தலில் மட்டுமல்ல, 21 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அனைத்திலும் அ.ம.மு.க வெற்றி பெறும் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் முறுக்கேற்றியுள்ளார். 

ஆர்.கே.நகர் தேர்தலை போல கணிப்புகளை முறியடித்து க்களவை தேர்தலில் மட்டுமல்ல, 21 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அனைத்திலும் அ.ம.மு.க வெற்றி பெறும் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் முறுக்கேற்றியுள்ளார். 

திருவண்ணாமலையில் இது குறித்து பேசிய அவர், மக்களவை தேர்தலில் தி.மு.க வெற்றி பெறும் என கருத்துகணிப்புகள் கூறுகின்றன.  இதையெல்லாம் நான் நம்புவதாக இல்லை. இது கருத்து கணிப்புகள் அல்ல. கருத்து திணிப்புகள். மக்களவை தேர்தல், 21 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் என அனைத்திலும் அ.ம.மு.க வெற்றி பெறும். ஆர்.கே.நகர் தேர்தலில் அனைத்து கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கும் வகையில் நான் வெற்றி பெற்றதை மறந்து விடக்கூடாது. 

‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பின் போராட்டத்தை பேசித் தீர்க்க வேண்டுமே தவிர சர்வாதிகார போக்கில் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் கைது செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது. பேசி தீர்ப்பதை விட்டு விட்டு சர்வாதிகாரி போல் கைது செய்வது தீர்வாகாது. இது ஜனநாயகத்துக்கு நல்லது கிடையாது. இந்த அரசு இதற்கான பின்பலன்களை அனுபவிக்கும்.

உச்சநீதிமன்றத்தில் சின்னம் தொடர்பான வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்வது இல்லை. குறிப்பாக தமிழகத்தில் அ.ம.மு.க.விற்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.

சில கட்சிகளுடன் தேர்தல் கூட்டணிக்காக பேசிக்கொண்டு வருகிறேன். அது முழுமையடைந்தவுடன் உங்களுக்கு தெரிவிப்பேன். தொண்டர்கள் 95 சதவிகிதம் பேர் அ.ம.மு.க.விடம் உள்ளனர். ஆட்சி அதிகாரம் அங்கு உள்ளதால் சிலர் ஒட்டிக்கொண்டு உள்ளனர். எலும்பு கூடு மட்டும் தான் அ.தி.மு.க.வில் உள்ளது. ரத்தமும், சதையுமான தொண்டர்கள் எங்களிடத்தில் உள்ளனர்’’ என அவர் தெரிவித்தார். 
 

click me!