
மூச்சு முட்ட முட்ட நெருக்கி தள்ளிய ரெய்டு மேளாவுக்கு பிறகும் ’மிஸ்டர் கூல்’ ஆகத்தான் வளைய வருகிறார் தினகரன். ஆனால் இரு முதல்வர்களைப் பற்றி பேச ஆரம்பித்தால் சிரித்த முகம் மாறாமல் வார்த்தகளை மட்டும் கத்தியாய் செருகுகிறார்...
“பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் நல்லவர்கள், விசுவாசிகள் என நம்பினோம். அந்த நம்பிக்கையில்தான் அம்மாவிடம் அந்த காலத்தில் அறிமுகம் செய்து வைத்தோம். அம்மாவை போல் சின்னம்மாவும் இவர்களை மதித்து நடத்தினார். ஆனால் நன்றி, விசுவாசம் என எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள் இருவரும்.
பன்னீர்செல்வத்தை முன்பு மூன்று முறை முதலமைச்சராக்கியதும், சிறைக்கு செல்லும் முன்பு எடப்பாடியை முதல்வராக்கியதும் சின்னம்மாதான். அந்த தியாகமும், பெருந்தன்மையும் இவர்களுக்கு புரியும், தெரியும். ஆனால் பதவி மற்றும் பண ஆசை கண்ணை மறைக்கிறது. சோற்றில் உப்புப் போட்டு சாப்ப்பிடுபவர்களாக இருந்தால் இந்த உண்மையை ஒப்புக் கொள்வார்கள்.
‘பன்னீரை நீக்கிவிட்டு நீங்கள் முதலமைச்சராகுங்கள்.’ என்று சின்னம்மாவிடம் கெஞ்சியவரே எடபபடிதான். ஆனால் சின்னம்மாவோ சிரித்து மறுத்துவிட்டு இவரை முதல்வராக்கினார்.
ஆனால் இரு எதிரிகளும் அதிகாரத்துக்காக இன்று கழுத்தை கட்டிக் கொண்டு எங்களுக்கு துரோகம் செய்கிறார்கள். மக்கள் இதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நல்லது நடக்கும் விரைவில்.” என்று போட்டுப் பொளந்திருக்கிறார்.
இந்த ‘உப்பு’ விஷயத்துக்கு எடப்பாடி - பன்னீர் தரப்பிலிருந்து வரப்போகும் பதிலை நினைத்தால் இப்பவே காது கரிக்கிறது.