
'விவேக்தான் சென்டர் பாயின்ட்'...வெளிவந்த அடுத்த உண்மை..!
ஜெயா தொலைக்காட்சி, நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கை அலுவலகம் மட்டுமல்லாமல் இளவரசி மகன் விவேக் ஜெயராமன் வீடு, பெங்களூருவில் உள்ள டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளர் புகழேந்தியின் வீடு உள்ளிட்ட 10 இடக்ளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில் விவேக் தான் ஹாய்லைட்...!
காரணம் : ஜாஸ் சினிமாஸ்
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பெரும் நிறுவனமாக வளர்ந்தது ஜாஸ் சினிமாஸ். இதனை சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே ஜாஸ் சினிமாஸ் ஆரம்பிக்கப்பட்டது.
வந்த வேகத்தில் அப்போதுதான் புதிதாக வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் தொடங்கப்பட்ட சத்யம் சினிமாஸின் லக்ஸ் சினிமாவை வாங்கியது ஜாஸ். மொத்தம் 11 அரங்குகள். அவற்றில் ஒன்று ஐமேக்ஸ் தியேட்டர். 1000 கோடி ரூபாய்க்கு இந்த அரங்குகளை வாங்கியதாக தகவல் வெளியானது.
ஆனால் அப்போது எந்த ரெய்டும் நடத்தப்படவில்லை. ஜாஸ் நிறுவனமும் கபாலி, விவேகம் என பெரிய படங்களை வாங்கி விநியோகித்தது. இன்று ஜாஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் முக்கியமான விநியோக நிறுவனமாகத் திகழ்கிறது.
தற்போது 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜாஸ் சினிமாஸ் வாங்க எப்படி பணம் வந்தது ?இதற்கு பின்னணி என்ன?
இது மட்டுமில்லாமல் தனது கட்டுக்குள் உள்ள 150 திரை அரங்குகள் பின்னணி என்ன? ஒவ்வொரு நாளும் கூடி கொண்டே செல்லும் பல கோடி ரூபாய் வருமானம் எப்படி சாத்தியம் ..
27 வயதே ஆன விவேக்கிற்கு எப்படி இத்தனை சொத்துக்கள் ?
சிறுவயது முதலே ஜெயலலிதா மற்றும் சசிகலா உடன் விவேக் அதிகம் இருந்ததால், சசிகலாவின் மேலும் பல சொத்து விவரம் முதற்கொண்டு விவேக்கிற்கு தெரிந்திருக்கும்...... இது போன்ற பல முக்கிய காரணங்களை முன்வைத்து தான், இந்த வருமான வரி சோதனை நடத்தப் பட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது