கருணாநிதியின் உடலுக்கு தினகரன், ரஜினிகாந்த் அஞ்சலி

Published : Aug 08, 2018, 06:55 AM IST
கருணாநிதியின் உடலுக்கு தினகரன், ரஜினிகாந்த் அஞ்சலி

சுருக்கம்

கருணாநிதியின் உடலுக்கு தினகரன், ரஜினிகாந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதியின் உடலுக்கு தினகரன், ரஜினிகாந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதையடுத்து அவரது உடல் எம்பாமிங் செய்யப்பட்டு காவேரி மருத்துவமனையிலிருந்து இரவு 9.30 மணியளவில் அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கருணாநிதியின் குடும்பத்தினரும் உறவினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் உடலுக்கு திமுக  பொதுச்செயலாளர் க.அன்பழகன், திருமாவளவன், முத்தரசன், திருநாவுக்கரசர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடலுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் கருணாநிதியின் உடல் சிஐடி காலனிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. ராஜாஜி ஹாலில் ஏராளமான தொண்டர்கள் திரண்டுள்ளனர். 

கருணாநிதியின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன், கருணாநிதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

நேற்றிரவு கோபாலபுரம் இல்லத்துக்கு சென்ற ரஜினிகாந்த், கடும் கூட்ட நெரிசலால் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாமல் திரும்பிய நிலையில், காலையில் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அரசியல் தலைவர்களும் பல துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!