ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடல் --- ஆயிரக்கணக்கனோர் கண்ணீர் அஞ்சலி!!

First Published Aug 8, 2018, 6:35 AM IST
Highlights

சென்னை சிஐடி நகர் இல்லத்தில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால்  ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அ சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். 

இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவராக கருதப்படும்  கருணாநிதியின் மறைவுக்கு, குடியரசுத் தலைவர், , பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும்  தேசிய தலைவர்கள், திரை பிரபலங்கள்  என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.

பின்னர் காவேரி மருத்துவமனையில் இருந்து இரவு 9.20 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்,  கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு குடும்பத்தின்ர், உறவினர்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.

கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் உடலுக்கு திமுக  பொதுச்செயலாளர் க.அன்பழகன், திருமாவளவன், முத்தரசன், திருநாவுக்கரசர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடலுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். மேலும் கருணாநிதியின் உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கருணாநிதியின் உடல் சிஐடி காலனிக்கு கொண்டு வரப்பட்டது.  அங்கு அவரது குடும்பத்தினர் பொதுமக்களும், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கனோர் இறுதி மரியாதை செலுத்தினர்.

பின்னர் கருணாநிதியின் உடல் சிஐடி காலனியில் இருந்து ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி அரங்கத்திற்கு காலை 5.30 மணிக்கு கொண்டு வரப்பட்டது. கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொண்டர்க்ள் பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

click me!