கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைக்குமா? இன்று காலை 8.30 மணிக்கு தீர்ப்பு!

First Published Aug 8, 2018, 4:14 AM IST
Highlights

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் அனுமதி கோரி தி.மு.க. சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் குலுவாடி மற்றும் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் அனுமதி கோரி தி.மு.க. சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் குலுவாடி மற்றும் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது. திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ, வில்சன் உள்ளிட்டோர் ஆஜராகியுள்ளனர். தமிழக அரசு சார்பில் சி.எஸ்.வைத்தியநாதன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இந்நிலையில் தி.மு.க மனு இன்று காலை 8 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் ஒத்திவைத்தனர். காலை 8 மணிக்குள் தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர். அதை தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்கப்படுகிறது.

இந்நிலையில் நான் தொடர்ந்த வழக்கிற்கும் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்யக் கேட்கும் இடத்திற்கும் தொடர்பில்லை, அதே நேரத்தில் அரசு எனது வழக்கை காரணம் காட்டி இடம் மறுப்பதால் எனது 4 வழக்கையும் திரும்பப் பெற்று விட்டேன் என வழக்கறிஞர் துரைசாமி பேட்டியளித்துள்ளார். மெரினாவில் கலைஞருக்கு இடம்தர மறுப்பதற்கு வழக்குகளை அரசு காரணம் காட்டுகிறது என குற்றம்சாட்டியுள்ளார். வழக்குகளை அரசு காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.

 திமுக கேட்கும் இடம் கடலோர மண்டலத்துக்குள் வரவில்லை என்று விளக்கமளித்துள்ளார். அதேவேலையில் ஜெயலலிதா நினைவிடம் கட்டப்படும் இடம், கட்டடம் கட்ட அனுமதிக்கப்படாத கடலோர பாகுதி என்றார். அண்ணா நினைவிடம் உள்ள நிலம் கூவம் நதிக்கரையாகும். தமது வழக்கு தடை என்றால் வாபஸ் பெற தயார் என்று வழக்கறிஞர் துரைசாமி கூறியுள்ளார். கலைஞர் உடல் மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதே ஒரே நோக்கம் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் பாமக சார்பில் பாலு தொடுத்த வழக்கும் திரும்ப பெற்றார். 

click me!