நிஃபா காய்ச்சலைக் கட்டுப்படுத்த உழைத்தவர்களுக்கு கௌரவம் …. லினிக்கு சிறந்த செவிலியர் விருது….. என்ன செய்யப் போகுது தெரியுமா கேரள அரசு….

First Published Jun 28, 2018, 8:24 AM IST
Highlights
dignity to the doctors and nurses who worked to control the Nifa fever in kerala


கேரளாவில் வேகமாக பரவி வந்த நிஃபா காய்ச்சலைக் கட்டுப்படுத்த  உதவிய மருத்துவர்களுக்கு தங்கப்பதக்கமும், நர்ஸ்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும் என மாந்ல அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில்  கடந்த மாதம் நிஃபா  வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். மாநிலம் எங்கும் பதவி விடுமோ என கேரள மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டது.



கேரளாவில் பரவிய  நிஃபா  வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.. காய்ச்சல் பாதிப்புகளின் தாக்கத்தை உணர்ந்து மாநில அரசு எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தற்போது நிஃபா காய்ச்சல் பாதிப்பு  முற்றிலும் கட்டுக்குள் உள்ளது.

இந்நிலையில், கொடூர நிஃபா  காய்ச்சலைக் கண்டு  பயப்படாமலும், தங்களது பாதுகாப்பை பொருட்படுத்தாமலும், அதனை கட்டுப்படுத்த உதவிய டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கேரள அரசு பரிசு மற்றும் உதவித்தொகையை அறிவித்துள்ளது. முதலமைச்சர்  பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி நான்கு உதவி பேராசிரியர்கள், 19  செவிலியர்கள், 7 செவிலியர் உதவியாளர்கள், 17 துப்புரவு ஊழியர்கள், 4 மருத்துவமனை ஊழியர்கள், 2 சுகாதார ஆய்வாளர்கள், 3 ஆய்வக நபர்கள் உள்ளிட்ட 61 பேருக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

டாக்டர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியில் இருந்த போது நிபா வைரஸ் தாக்குதலுக்கு  ஆளாகி உயிரிழந்த நர்ஸ்  லினிக்கு கேரள அரசின் சிறந்த செவிலியர் விருது வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!