நான் மெரிட்ல எம்பிபிஎஸ் படிச்சேன் !!  நீங்க எம்ஜிஆர் சிபாரிசில் எம்பிபிஎஸ் படிச்சீங்க !!   அப்ப நீங்கதான் அறிவாளி….தமிழிசையை வறுத்தெடுத்த அன்புமணி ….

Asianet News Tamil  
Published : Jun 27, 2018, 11:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
நான் மெரிட்ல எம்பிபிஎஸ் படிச்சேன் !!  நீங்க எம்ஜிஆர் சிபாரிசில் எம்பிபிஎஸ் படிச்சீங்க !!   அப்ப நீங்கதான் அறிவாளி….தமிழிசையை வறுத்தெடுத்த அன்புமணி ….

சுருக்கம்

PMK Anbumani ramadoss speake about tamilisai

யார் அறிவாளி என்று நிரூபிக்க ஒத்தைக்கு ஒத்தை வாருங்கள் என தமிழிசைக்கு சவால் விட்டுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, நான் மெரிட்ல எம்பிபிஎஸ் படிச்சேன் … நீங்க எம்ஜிஆர் சிபாரிசில் எம்பிபிஎஸ் படிச்சீங்க….அப்ப நீங்கதான் அறிவாளி என செமையாக கலாய்த்துள்ளார்.

மதுரையை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மர்ரிய அரசு அண்மையில் அறிவித்தது. இந்த  எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவதற்கான திட்டத்தை முதலில் யார் கொண்டு வந்தது என்பது குறித்து, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே கடுமையான மோதல் உருவாகியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், பாஜக தலைவர் தமிழிசையை அறிவற்றவர் என விமர்சித்தார். இது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

அதற்கு பதிலடி தரும் விதமாக, அன்புமணி ராமதாஸ், தான் மட்டும்தான்  அதிபுத்திசாலி என்று  நினைக்கிறார்.  வேறு எந்தக் கட்சியிலும் புத்திசாலிகள் இல்லை எனவும்  அவர் பேசி வருகிறார்.

ஆனால்  20 ஆண்டுகால கடின உழைப்பு, அறிவாற்றல், தேசிய பண்பு இருப்பதால் தான் ஒரு தேசியக் கட்சியின் தலைவராக  நான் வந்திருக்கிறேன். தகுதியில்லாமல் வரவில்லை என குறிப்பிட்டார்.

ஒரு அரசியல்வாதியின் மகளாக இருந்தபோதும் அந்த நிழலில்  நான் தலைவராக வரவில்லை. சுய உழைப்பில் தலைவராக வந்திருக்கிறேன். யார் அறிவாளி என என்னுடன் விவாதம் நடத்த அன்புமணி தயாரா?” என தமிழிசை  கேள்வி எழுப்பியிருந்தார்..

இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், “நான் மெரிட்டில் எம்பிபிஎஸ் படித்தேன். தமிழிசை முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பரிந்துரையின் பேரில் எம்பிபிஎஸ் படித்தவர். அதனால் அவர்தான் அறிவாளி என்பதை நானே ஒத்துக்கொள்கிறேன் என கிண்டல் செய்தார்.

PREV
click me!

Recommended Stories

டெல்லி பறந்த விஜய்.. நாளை சிபிஐ விசாரணை.. அவிழப்போகும் முடிச்சுகள்.. பரபரப்பு தகவல்!
ஓட்டு கேட்க எதுனாலும் சொல்லலாம்.. அதிமுகவை விமர்சித்த ராமதாஸ்.. யாருடன் கூட்டணி? முக்கிய அறிவிப்பு!