சசிகலா உடல்நிலை குறித்து மாறுபட்ட தகவல்.. உறவினர்கள் விவேக், ஜெய்ஆனந்த். டாக்டர் வெங்கடேசன் பகீர் புகார்.

By Ezhilarasan BabuFirst Published Jan 21, 2021, 12:38 PM IST
Highlights

இந்நிலையில் சசிகலாவின் உறவினர்களான விவேக் ஜெயராமன், ஜெயானந்த் மற்றம் உதவியாளார் கார்த்திகேயன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு வருகை புரிந்து உள்ளனர்.

சசிகலா உடல்நிலையில் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதற்கிடையில் அவரின் மற்ற குடும்ப உறுப்பினர்கள் சசிகலாவை சந்திக்கவோ அல்லது அவரின் நலைமை குறித்தோ மருத்துவர்கள் அதிகாரப்பூருவமாக எதையும் கூற மறுக்கின்றனர் என  புகார் தெரிவித்துள்ளனர். இதனால் ச சிகலா விவகாரத்தில் சந்தேகம், குழப்பம் ஏற்பட்டுள்ளது.  

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா தண்டனை காலம் முடிந்து வரும் 27ஆம் தேதி விடுதலையாக உள்ளார். இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை  நிர்வாகத்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு சிவாஜி நகரிலுள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இரண்டாவது நாளாக மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். 

பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சசிகலா சிறப்பு சிகிச்சை பிரிவில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். சிறப்பு சிகிச்சை பிரிவில் போதிய வசதி இல்லாததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  இந்நிலையில் பெங்களூரில்  முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், சசிகலா உடல் நிலை சீராக உள்ளது. சசிகலாவுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சசிகலாவுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிடி ஸ்கேன் மூலமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. சசிகலாவின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது. சசிகலாவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க விரும்புகிறோம். சசிகலா உடல்நிலையில் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில் சசிகலாவின் உறவினர்களான விவேக் ஜெயராமன், ஜெயானந்த் மற்றம் உதவியாளார் கார்த்திகேயன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு வருகை புரிந்து உள்ளனர். 

சசிகலாவை சந்திக்கவோ, அவரது உடல் நிலை குறித்தோ எந்த வித அதிகாரபூர்வ அரிவிப்பையோ, தகவலோ  மருத்துவமனை சார்பில் வழங்கப்படவில்லை என அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ச சிகலா குடும்ப உறுப்பினர்கள் இப்படி இரு வேறு கருத்துக்களை கூறியிருப்பது குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது. 
 

click me!