இறுதி மரியாதை செலுத்தக் கூட வரவில்லையே..! கொதிக்கும் நெல்லை திமுக..!

Published : Feb 27, 2021, 06:40 PM IST
இறுதி மரியாதை செலுத்தக் கூட வரவில்லையே..! கொதிக்கும் நெல்லை திமுக..!

சுருக்கம்

காலம் முழுவதும் கட்சி கட்சிண்ணே இருந்தவருக்கு இறுதி மரியாதை செலுத்த ஒருவர் கூட வரல. உழைப்பவர்களுக்கு திமுகவில் கிடைக்கும் உண்மையான மரியாதை இதுதானா?

திமுகவின் நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செல்லத்துரை அண்மையில் உள்ளூர் பிரச்சனையில் வெட்டி கொல்லப்பட்டார். கட்சியில் கடந்த பல ஆண்டுகளாக ஆக்டிவாக இருந்த இவர், பல லகரங்களை வாரி இறைத்திருக்கிறார். இதனால் செல்லத்துரையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க தலைமையிலிருந்து யாராவது வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

இது தொடர்பாக உள்ளூர் நிர்வாகிகள் சென்னைக்கு போன் போட்டு பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் உடல் தகனம் செய்யப்படும் வரை ஒருவரும் எட்டிப் பார்க்கவில்லை. ‘’காலம் முழுவதும் கட்சி கட்சிண்ணே இருந்தவருக்கு இறுதி மரியாதை செலுத்த ஒருவர் கூட வரல. உழைப்பவர்களுக்கு திமுகவில் கிடைக்கும் உண்மையான மரியாதை இதுதானா?’’என உறவினர்களும், லோக்கல் கட்சிக்காரர்களும் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!
அமமுக யாருடன் கூட்டணி?.. மதில் மேல் பூனையாக டிடிவி தினகரன்.. முக்கிய அறிவிப்பு!