அன்பான பொது மக்களே..தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1950 என்ற எண்ணை அழுத்தவும்.. சென்னை மாநகர ஆணையர்.

By Ezhilarasan BabuFirst Published Feb 27, 2021, 6:18 PM IST
Highlights

தமிழகத்திலேயே அதிக வாக்குச்சாவடி சென்னையில் தான் உள்ளதாக தெரிவித்தார். மேலும்,"தேர்தல் சம்மந்தமான புகார்களை தெரிவிக்க 1950 என்ற நம்பர் அறிமுகபடுத்தபட்டுள்ளது. 

பேனர்கள் வைப்பது, சுவரொட்டிகள் மற்றும் சுவரில் எழுதுவது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளை கண்காணிக்க 48  பறக்கும் படை குழுவும் 48 நிலையான கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதனை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். அதனை தொடர்ந்து தேர்தல் சம்பந்தமான ஏற்பாடுகள் பற்றியும் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாகவும், எவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பது போன்ற பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளபட்டது. 

 பின்ன செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் பிரகாஷ், 1200 வாக்காளர்கள் இருந்தால் மட்டுமே வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் ஆனால் தற்பொழுது தேர்தல் ஆணையத்தின் மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளின்படி 1000  வாக்காளர்களுக்கு  மேல் இருந்தாலே அங்கு வாக்குச்சாவடி அமைக்கலாம் என்று புதிய சட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

சென்னையில் மட்டும் 6 ஆயிரம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட் டுள்ளதாகவும், 45 சதவிகித வாக்குசாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்திலேயே அதிக வாக்குச்சாவடி சென்னையில் தான் உள்ளதாக தெரிவித்தார். மேலும்,"தேர்தல் சம்மந்தமான புகார்களை தெரிவிக்க 1950 என்ற நம்பர் அறிமுகபடுத்தபட்டுள்ளது. நாளை முதல் முழுமையாக இது செயல்படும். சென்னையில் 40000 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். மாற்று திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் தபால் மூலம் தங்கள் வாக்குகளை செலுத்தலாம்.  

கொரோனா காலம் என்பதால் கட்சி பொதுக்கூட்டங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அனைத்து கட்சிகளுக்கும் வலியுறுத்தியுள்ளோம். னர்கள் வைப்பது, சுவரொட்டிகள் மற்றும் சுவரில் எழுதுவது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்றார். அனுமதிக்கபட்ட வீட்டின் சுவர்களில் மட்டுமே எழுத வேண்டும். 48  பறக்கும் படை குழுவுக்கும் 48 நிலையான கண்காணிப்பு குழுவுக்கும் தனியாக வாக்கி டாக்கி மற்றும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்" என தெரிவித்தார். 

 

 

click me!