சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவா ஆட்சிக்கு வந்தீங்க.. ஸ்டாலினை புரட்டி எடுத்த இயக்குனர் களஞ்சியம்.

Published : Feb 15, 2022, 04:58 PM IST
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவா ஆட்சிக்கு வந்தீங்க.. ஸ்டாலினை புரட்டி எடுத்த இயக்குனர் களஞ்சியம்.

சுருக்கம்

முக்கியமாக மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு நீட் நீக்கப்படும் என்றும் மேலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாழும் இஸ்லாமியர்களும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரையும் விடுதலை செய்வோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக அரசு வந்து 8 மாதங்களாகியும் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை..

பல ஆண்டுகளாக மாறி மாறி ஊழல் செய்த திராவிட கட்சிகளை புறந்தள்ளி நாம் தமிழர் கட்சிக்கு வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஆதரவு தெரிவித்துள்ளனர். நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரித்து தமிழ்த் தேசிய இயக்கங்கள் அமைப்புகள் கட்சிகள் தலைவர்கள் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அதில் பேசிய தமிழர் நலம் பேரியக்கம் களஞ்சியம் அவர்கள் திமுக அதிமுக இரண்டு கழகங்களும் தமிழ் நாட்டின் அதிகார பீடத்தில் அமர்ந்து ஆட்சி செய்து தமிழ் மொழி உரிமை தமிழர் வாழ்வுரிமை தமிழ் நாட்டின் நில உரிமைகள் எல்லாம் இழந்தோமே தவிர இரு கட்சிகளினால் தமிழ் நாட்டுக்கு எந்த நன்மையும் விளையவில்லை என்றார்.

தொடக்கத்தில் தனிநாட்டு கொள்கை என தமிழ் தேசிய இன மக்களை அணிதிரட்டி பின்னர் அடக்குமுறைகளுக்கு ஒடுக்குமுறைகளுக்கும் கொள்கையை கைவிட்டு மாநில சுயாட்சி என்ற நிலை மாறி இன்று அதையே வெற்று அரசியல் ஆக்கி திமுக ஆட்சி செய்து வருகிறது. அது போல ஏற்கனவே கொண்டு வந்துள்ள ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டம் வேளாண்மை சட்டங்கள் என மாநில உரிமைகளில் உள்ள அனைத்து துறைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் அதிகாரத்தை பொருட்படுத்தாத அல்லது எதிர்ப்பு தெரிவித்தது போல் சட்டமன்றத் தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றி தனது கடமையை முடித்து விட்டு திமுக அரசை நாடகம் ஆடி வருகிறது என்றார்.

முக்கியமாக மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு நீட் நீக்கப்படும் என்றும் மேலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாழும் இஸ்லாமியர்களும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரையும் விடுதலை செய்வோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக அரசு வந்து 8 மாதங்களாகியும் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. முற்றிலும் தன்னுடைய குடும்பம் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு எதிலும் ஊழல் எங்கும் ஊழல் என ஊழல் அரசியல் நடத்திவரும் திராவிடக் கட்சிகளின் சுரண்டல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு மாற்றாக எளிய வீட்டு பிள்ளைகளை வேட்பாளராக கொண்டுள்ள சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் விவசாய சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?