என் வீட்டு பூஜை அறையில் குழந்தை ஏசு.. நாகூர் தர்காவுக்கு ட்ரிப்.. உண்மையை கொட்டி தீர்த்த மதுவந்தி.

Published : Feb 15, 2022, 02:45 PM ISTUpdated : Feb 15, 2022, 02:48 PM IST
என் வீட்டு பூஜை அறையில் குழந்தை ஏசு.. நாகூர் தர்காவுக்கு ட்ரிப்.. உண்மையை கொட்டி தீர்த்த மதுவந்தி.

சுருக்கம்

நான் படித்தது லயோலா கல்லூரியில் தான், ஆனாலும் என்னை பலர் மதுவந்தி பிராமின், ஹிந்து அதனால் அவருக்கு திமிர் அதிகம் என்று தேவையில்லாத விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். நான் படித்தது பத்மா சேஷாத்ரியாக இருக்கலாம், நான் போன கல்லூரி லயோலா கல்லூரி, எனக்கு  நண்பர்கள் அதிகம் இருக்கிற கல்லூரி நியூ கல்லூரி, நான் அதிகம் நேசிப்பது குழந்தை இயேசுவை, எனது பூஜை அறையில் குழந்தை இயேசுவின் உருவத்தை வைத்திருக்கிறேன். 

ஹிஜாப்  மதவெறியை தூண்டுகிறது என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது, ஆடை என்பது அவரவர் சுதந்திரம் என மதுவந்தி கூறியுள்ளார். தான் படித்தது லயோலா கல்லூரியில்தான் என்றும், தனது நண்பர்கள் அதிகம்பேர் நியூ கல்லூரியில் பயின்றவர்கள்தான் என அவர் கூறியுள்ளார். மேலும் தனது  வீட்டில் குழந்தை இயேசு படத்தை வைத்திருப்பதாகவும், நாகூர் தர்காவுக்கு போய் வருவது தனது வழக்கம் என்றும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார். 

தமிழக பாஜகவின் சர்ச்சை பிரமுகர்களில் ஒருவர்தான் ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி, பல விஷயங்களில் பாஜகவுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் பேசியும் குரல் கொடுத்தும் வருகிறார். பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மதுவந்தி உளறி கொட்டிய  வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இவர் பாஜகவின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் உள்ளார். "பிராமணர்களாக பிறத்தவர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள்"  என பேசியது பின்னர் பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடந்த பாலியல்  விவகாரத்தில் ஆசிரியருக்கு சாதகமாக பேசியது போன்றவற்றால் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார். பிஎஸ்பிபி பள்ளி விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று குரல் கொடுத்து வந்த நிலையில், மதுவந்தி மட்டும் எத்தனை பேர் வந்தாலும் எனது பாட்டி கட்டிகாத்த புகழுக்கும், அவர் உருவாக்கியிருந்த ஸ்தாபனத்திற்கும் (பள்ளிக்கூடத்திற்கும்) அவமரியாதை ஏற்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் என கடுமையாக எச்சரித்தது கடும் விமரிசனத்திற்குள்ளானது. 

அடிக்கடி வாயை கொடுத்து வம்பில் சிக்கிக் கொள்வது அவரது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதேபோல் பலரும் அவரை சங்கிகள் என்று விமர்சித்து வந்த நிலையில், ஆமாம் நான் சங்கிதான் என அவர் பேசியதை பலரும் ட்ரோல் செய்து அவரை கலாய்த்ததும் தனிக் கதை  இது எல்லாவற்றிற்கும் மேலாக "பிராமணர்களாக பிறந்தவர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள்" என அவர் பேசியதுதான் இன்றளவும் மது வந்தியின் ஹைலைட் கமெண்டஸ்சாக பார்க்கப்படுகிறது. இதைவைத்தே இன்னும் கூட அவரை பலரும் கலாய்த்தும், விமர்சத்தும் வருகின்றனர். இப்படி எப்போதும் இந்து மதத்திற்கும் இந்து சடங்கு சம்பிரதாயங்களுக்கும், பாஜகவுக்கும் ஆதரவாகவே பேசக்கூடிய அவர் ஹிஜாப் விவகார்த்தில் மட்டும் பாஜகவுக்கு நேர் எதிரான கருத்து வெளிப்படுத்தியுள்ளார்.

ஹிஜாப் அணியக்கூடாது, அனைவரும் பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப்பை தவிர்க்க வேண்டும், ஹிஜாப் மதவெறியை தூண்டுகிறது, அது ஒரு மதத்தின் அடையாளம் எனவே மதக்குறியீடுகளுடன் பள்ளிக்கூடங்களுக்கு வரக்கூடாது, அப்படி அவர்கள் வந்தால் தாங்களும் காவித்துண்டு அணிந்து பள்ளி, கல்லூரிக்கு வருவோம் என்று இந்துத்துவா மாணவர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதப்பொருளாகவும் சரிச்சைக்குரிய பிரச்சனையாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் பாஜகவினர் பலரும் ஹிஜாப்புக்கு எதிராக பேசி வருகின்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள மது வந்தி பள்ளிக்கூடங்களில் வேண்டுமானால் இதை தவிர்க்கலாம், ஆனால் கல்லூரிகளில் கூடாது என்று சொல்ல முடியாது. ஏன் என்றால் கல்லூரிகளுக்கு யூனிபார்ம் என்ற வரையறை இல்லை. அதேபோல் இது மதவெறியை தூண்டுகிறது என்று சொல்வது என்னுடைய கருத்து அல்ல. அதை ஏற்கவும் முடியாது.

நான் படித்தது லயோலா கல்லூரியில் தான், ஆனாலும் என்னை பலர் மதுவந்தி பிராமின், ஹிந்து அதனால் அவருக்கு திமிர் அதிகம் என்று தேவையில்லாத விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். நான் படித்தது பத்மா சேஷாத்ரியாக இருக்கலாம், நான் போன கல்லூரி லயோலா கல்லூரி, எனக்கு  நண்பர்கள் அதிகம் இருக்கிற கல்லூரி நியூ கல்லூரி, நான் அதிகம் நேசிப்பது குழந்தை இயேசுவை, எனது பூஜை அறையில் குழந்தை இயேசுவின் உருவத்தை வைத்திருக்கிறேன். நான் தர்காவுக்கு போவேன், எனக்கு ஜுரம் வந்தால் தர்காவில்  மந்திரித்து வருவேன், அதை நம்புகிறவள் நான். நான் வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளார் என ஒரே சமயத்தில் ட்ரிப் சென்று வருவேன். இதில் எதுவுமே தவறு இல்லை, ஆனால் ஒன்றை கட்டாயப்படுத்தி அதில் அரசியல் செய்வது தான் தவறு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!