சசியை முன்கூட்டியே ரிலீஸ் பண்றோமுன்னு நாங்க சொன்னோமா?: பிளேட்டை திருப்பிப் போடும் பா.ஜ.க.

By Ezhilarasan BabuFirst Published Nov 6, 2019, 6:18 PM IST
Highlights

அக்கட்சியின் தமிழக பொதுச்செயலாளரான வானதி சீனிவாசன் “சசிகலாவுக்கும், மத்திய அரசுக்கு என்னாங்க சம்பந்தம்? எதுவுமே கிடையாது. அந்தம்மா முன்கூட்டியே வெளியே வருவாங்களா அல்லது முழுமையான தண்டனை காலத்தை அனுபவித்துவிட்டு வெளியே வருவாங்களான்னெல்லாம் எங்ககட்சிக்கு எந்த  அக்கறையுமில்லை. அப்படி ஏதாவது நாங்க சொன்னோமா? அதெல்லாம் கர்நாடக சிறைத்துறை எடுக்க வேண்டிய முடிவு. சிறையிலிருந்து வெளியே வந்த பின் அவர் அ.தி.மு.க.வின் தலைவராக உட்காருவாரா? இல்லையா! என்பதெல்லாம் அவர்களின் உட்கட்சி சம்பந்தப்பட்ட விஷயம்.

”இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அ.தி.மு.க.வை ஒரு சோதனைச் சாலை எலி ரேஞ்சுக்கு ஆக்கிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. ஆட்சி கவிழாமல் செல்ல உதவிக் கொண்டிருக்கிறோம்! எனும் ஒற்றை வரியை சொல்லிவிட்டு, அக்கட்சியை  வைத்து அத்தனை வகையான அரசியல் பரிசோதனைகளையும் செய்கிறது டெல்லி மேலிடம்!” என்று நறுக்கென ஒரு ஸ்டேட்மெண்டை தட்டிவிடுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஏன் இந்த விமர்சனம்? என்று கேட்டபோது....விவரிக்க துவங்கியவர்கள் “கடந்த சில வாரங்களுக்கு முன் சசிகலாவை வைத்து ஒரு புயலை அ.தி.மு.க. வினுள் கிளப்பியது பா.ஜ.க. அதாவது சசிகலவை  அவரது தண்டனைக்காலம் முடியும் முன்னரே ரிலீஸ் செய்து, அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்க வைத்து, அவரைக் கொண்டே தேர்தலை எதிர்கொள்ளும் திட்டத்தில் தாங்கள் இருப்பது போன்ற ஒரு தகவலை அவர்களாகவே பரப்பினர். 

இதை அ.தி.மு.க. எப்படி எதிர்கொள்கிறது? உண்மையிலேயே இப்படி ஒரு சூழல் வந்தால் அ.தி.மு.க. நிர்வாகிகளின் ரியாக்‌ஷன் மற்றும் முடிவுகள் என்னவாக இருக்கும்? என்பதே பா.ஜ.க.வின் கேள்விகள். ஆனால் இந்த தகவல் பரவிய போது அதை அ.தி.மு.க.முக்கியஸ்தர்கள் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு வேளை பயந்து நடுங்குவார்களோ? நம்மிடம் வந்து ‘அப்படியெல்லாம் அந்தம்மாவை சீக்கிரம் வெளியே கொண்டு வராதீங்க!’ என்று பம்முவார்களோ? அந்த பயத்தை வைத்து உள்ளாட்சி மற்றும் பொதுத் தேர்தல்களில் அதிகப்படியான ஸீட்களை அ.தி.மு.க.விடம் கறக்கலாம்! என்றெல்லாம் திட்டமிட்டது பா.ஜ.க. ஆனால் அ.தி.மு.க. தரப்போ ரொம்ப கெத்தாக ‘சசிகலாவுக்கு என்றுமே அ.தி.மு.க.வில் இடமில்லை.’ என்று தங்களின் முக்கிய அமைச்சர்கள் மூலம் பேட்டி தட்டியது. எதையோ எதிர்பார்த்து, இதில் இப்படி ஏமாந்து போன பா.ஜ.க.வோ அதன் பின் இப்போது பிளேட்டை அப்படியே திருப்பிப் போட்டிருக்கிறது. 


அக்கட்சியின் தமிழக பொதுச்செயலாளரான வானதி சீனிவாசன் “சசிகலாவுக்கும், மத்திய அரசுக்கு என்னாங்க சம்பந்தம்? எதுவுமே கிடையாது. அந்தம்மா முன்கூட்டியே வெளியே வருவாங்களா அல்லது முழுமையான தண்டனை காலத்தை அனுபவித்துவிட்டு வெளியே வருவாங்களான்னெல்லாம் எங்ககட்சிக்கு எந்த  அக்கறையுமில்லை. அப்படி ஏதாவது நாங்க சொன்னோமா? அதெல்லாம் கர்நாடக சிறைத்துறை எடுக்க வேண்டிய முடிவு. சிறையிலிருந்து வெளியே வந்த பின் அவர் அ.தி.மு.க.வின் தலைவராக உட்காருவாரா? இல்லையா! என்பதெல்லாம் அவர்களின் உட்கட்சி சம்பந்தப்பட்ட விஷயம். ஜெயலலிதா இருந்த போது இருந்த அ.தி.மு.க. வேறு, இப்போது இருக்கும் அ.தி.மு.க. வேறு. அடையாளமின்றி விடப்பட்ட அந்த கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்திட ஒருவர் பொறுப்பேற்றுள்ளார். அவர்  மக்கள் நலன் நாடும் விதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கூட்டணி தோழர் எனும் முறையில் அக்கட்சியைப் பத்தி எங்களுக்கு இவ்வளவுதான் பார்வை.” என்று படபடத்துள்ளார். ஆக, சசிகலா விடுதலை! எனும் பூச்சாண்டிக்கு அ.தி.மு.க. பயப்படவில்லை என்பதால் அப்படியே பிளேட்டை திருப்பிப் போட்டுள்ளது பா.ஜ.க” என்கிறார்கள். ஓஹோ!

click me!