அம்மாவுக்கு உடம்புல வைட்டமின், கால்சியம் எல்லாம் குறைஞ்சு போச்சு! அவரை விட்டுடுங்க ப்ளீஸ்: கதறும் மாஜி முதல்வரின் மகள்.

By Vishnu PriyaFirst Published Nov 6, 2019, 6:17 PM IST
Highlights

என் தாய் மூன்று மாதங்களாக ஸ்ரீநகர் விருந்தினர் மாளிகையில் சிறை வைக்கப்பட்டுள்ளார். காஷ்மீரில் கடும் குளிர் துவங்கியுள்ளது. என் தாயின் உடல் நிலையை சமீபத்தில் பரிசோதித்த டாக்டர், அவரது ரத்தத்தில் வைட்டமின் டி, சிவப்பணுக்கள், கால்சியம் ஆகியவற்றின் அளவு மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவித்தார். எனவே அவரை வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும். -    இல்டிஜா முப்தி (மெஹபூபா முப்தியின் மகள்)

*    டில்லியில் நிலவும் காற்று மாசு, மக்களின் ஆயுட்காலத்தை குறைப்பதாக, அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இது மிகவும் ஆபத்தான போக்கு. வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் அல்லது டில்லியை விட்டு வெளியேற வேண்டும் எறு மக்களுக்கு  கூறப்பட்டுள்ளது. டில்லி, இந்த நாட்டின் தலைநகரம். அதிகாரிகளும், மக்களும் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும். மக்கள் கூட்டம் கூட்டமாக டில்லியை விட்டு வெளியேற முடியாது. 
-    உச்சநீதிமன்ற நீதிபதிகள். 

*    உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் பதினைந்து தினங்களில் வெளியாக உள்ளது. டிசம்பரில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தல் போல் மகத்தான வெற்றியை கழகம் பெற வேண்டும். 
-    ஓ.பன்னீர்செல்வம் 
*    தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில், பிளாஸ்டிக் குப்பைக்கு அரிசி வழங்கப்படுகிறது. நம் நாட்டின் தெலுங்கானா மாநிலத்திலும் எடைக்கு எடை அரிசி வழங்கப்படுகிறது. அது போலவே தமிழகத்திலும் செய்தால், பிளாஸ்டிக்கை ஒழித்துவிடலாம். 
-    ராமதாஸ்.

*    இடைத்தேர்தலில் தோல்வி அடைந்துள்ளோம் என்பது உண்மை. அதே நேரத்தில், அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது என்பது மாயை. மக்களின் ஆதரவு உண்மையிலேயே தங்களுக்கு கிடைத்துள்ளது என ஆளும் தரப்பு நம்பினால், உள்ளாட்சி தேர்தலை நடத்த தயங்குவது ஏன்?
-    மு.க.ஸ்டாலின்

*    நானும், தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் சந்தித்துப் பேசியது உண்மைதான். தமிழகத்தின் அர்சியல் கட்சி தலைவர்களான நாங்கள் அந்த சந்திப்பில் அரசியல்தான் பேசி இருப்போம். அதை எப்படி உங்களிடம் சொல்ல முடியும்?
-    வைகோ 

*    ராஜிவ்காந்தியை கொலை செய்தது விடுதலைப்புலிகள்தான்! என நான் சொன்னதால், தமிழக சிறையில் வாடும் ஏழு பேர் விடுதலை பாதிக்கப்பட்டுள்ளதாக, தி.மு.க. மற்றும் அதன் ஊதுகுழலான தி.க. தெரிவித்து இருக்கிறது. அந்த ஏழு பேர் விடுதலைக்கு இந்த இருவரும் இது நாள் வரையில் என்ன செய்தனர்? 19 வயதில் பேரறிவாளனை போலீஸார் கைது செய்தபோது ‘அவருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை’ என அறிக்கை விடுத்தவர்தான் இந்த வீரமணி.

*    நடிகர் ரஜினிக்கு மத்திய அரசு, வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவித்துள்ளது வரவேற்க்கத்தக்கது. முதலில் இந்த விருது, அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது. இப்போது ரஜினிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் எதுவும் இல்லை. இதில் மாநில அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. 
-    செல்லூர் ராஜூ

*    சுகாதாரத் துறையை விமர்சனம் செய்வதற்காகவே மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அவர் சுகாதாரத்துறை மீது குற்றம் சாட்டி வருகிறார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, மலிவான அரசியல் செய்கிறார். 
-    விஜயபாஸ்கர்

*    புவி வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதிக அளவில் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும். பருவ நிலை மாற்றம் குறித்து கட்சி நிர்வாகிகள் பிரசாரம் செய்ய வேண்டும். 
-    அன்புமணி ராமதாஸ்.

*    என் தாய் மூன்று மாதங்களாக ஸ்ரீநகர் விருந்தினர் மாளிகையில் சிறை வைக்கப்பட்டுள்ளார். காஷ்மீரில் கடும் குளிர் துவங்கியுள்ளது. என் தாயின் உடல் நிலையை சமீபத்தில் பரிசோதித்த டாக்டர், அவரது ரத்தத்தில் வைட்டமின் டி, சிவப்பணுக்கள், கால்சியம் ஆகியவற்றின் அளவு மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவித்தார். எனவே அவரை வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும். 
-    இல்டிஜா முப்தி (மெஹபூபா முப்தியின் மகள்)
 

click me!