ஆஸ்பத்திரியில் முககவசம் இல்லை என்று சொன்ன டாக்டர்... கை ,கால் கட்டப்பட்டு அரைநிர்வாணமாக ரோட்டில்...!!

Published : May 17, 2020, 08:02 PM IST
ஆஸ்பத்திரியில் முககவசம் இல்லை என்று சொன்ன டாக்டர்... கை ,கால் கட்டப்பட்டு அரைநிர்வாணமாக ரோட்டில்...!!

சுருக்கம்

தான் பணிபுரியும் மருத்துவமனையில் போதிய அளவிற்கு முககவசம் முழுகவச உடை உள்ளிட்ட உபகரணங்கள் இல்லை என்று கேள்வி எழுப்பிய மருத்துவர் அரை நிர்வாணமாக கை, கால் கட்டப்பட்டு ரோட்டில் கிடந்துள்ளார்.அவர் மீது மனநோயாளி என்கிற முத்திரை குத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 ஆந்திரமாநிலம். விசாகபட்டிணம் மாவட்டம், நரசிபட்டினம் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் சுதாகர்,தான் பணிபுரிந்த மருத்துவமனையில்போதுமான அளவிற்கு முகக் கவசங்கள் கவச உடைகள் உள்ளிட்ட உபகரணங்கள் இல்லை என்று மேல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதனையடுத்து டாக்டர் சுதாகர் காயமான நிலையில்,நரசிபட்டிணம் தேசிய நெடுஞ்சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் கிடந்துள்ளார்.இந்த தகவல் தெரிந்து போலீஸார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.அங்கு மருத்துவர் அடிக்கடி மனரீதியாக பாதிக்கப்பட்டவராக நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

மேலும் அவரை 'கிங் ஜார்ஜ்' மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் சுதாகர் மது அருந்தியிருப்பதை கண்டுபிடித்ததாகவும் அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
 
PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!