1 லட்சம் பரிசு.! மோடி சொன்ன 15 லட்சம் உங்கள் வங்கி கணக்கில் வந்துச்சா? மதுரை திமுகவினர் ஒட்டிய போஸ்டர்

By Raghupati R  |  First Published Jul 10, 2023, 8:49 PM IST

பாஜகவினருக்கு எதிராக மதுரையில் திமுகவினர் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


2014 பொதுத்தேர்தலின்போது, கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். கறுப்புப் பணத்தை மீட்பதற்காக மோடி அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், “பாஜக அரசு ரூ.15 லட்சம் கொடுப்பதாக தெரிவித்தது, ஆனால் ரூ.15 கூட கொடுக்கவில்லை என்று பேசினார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

Tap to resize

Latest Videos

நடிகர் விஜய்க்கு பேச்சு மட்டும் போதாது.. நடிகர் விஜய்க்கு அட்வைஸ் செய்த அன்புமணி ராமதாஸ் !

இதுபற்றி கூறிய அவர், “தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின் அவர்களுக்கு தோல்வி பயம் மூண்டு விட்டது போல் தெரிகிறது.  ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னரும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஊழல் ஆட்சியை நடத்திவரும் தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின், 2014ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு கொடுக்காத தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்ததாக பேசி வருகிறார்.

அவ்வளவு பணம் வெளிநாட்டில் ஊழல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னாரே தவிர அந்த பணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் சொல்லவில்லை” என்று கூறினார். இந்த நிலையில் மதுரை நகரில் பல்வேறு இடங்களில் திமுகவை சேர்ந்த பாலா என்பவர் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டியுள்ளார்.

அவர் ஒட்டியுள்ள போஸ்டரில், “மோடி சொன்ன 15 லட்சம் உங்கள் வங்கி கணக்கில் வந்ததா? ஆம் என்றால் ரசீது காட்டுங்கள். 1 லட்சம் பரிசு. இதில் சங்கிகளும் போட்டியில் கலந்து கொள்ளலாம்” என்று எழுதப்பட்டுள்ளது. மதுரையில் திமுகவினர் ஒட்டிய போஸ்டர்கள் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

16 இலட்சம் மதிப்பிலான காரை வாங்கிய பிரபல பெண் ஓட்டுநர் ஷர்மிளா.. யார் வாங்கி கொடுத்தா தெரியுமா?

வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்

click me!